125 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவை அறிமுகப்படுத்திய ஏர்டெல்! நன்மைகள் என்ன?
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் 125 நகரங்களில் 5G சேவைகளை வெளியிடுவதாக அறிவித்திருந்தது. இதன்மூலம், அதிகவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் நகரங்களின் மொத்த எண்ணிக்கை 265 ஆக கொண்டுள்ளது. மேலும், எங்கள் 5G வெளியீடு மார்ச் 2024 க்குள் அனைத்து நகரங்கள் மற்றும் முக்கிய கிராமப்புறங்களை உள்ளடக்கும் பாதையில் உள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது. தொடர்ந்து, ஏர்டெல் இப்போது ஜம்முவின் வடக்கு நகரத்திலிருந்து கன்னியாகுமரியின் தெற்கு முனை வரை ஒவ்வொரு பெரிய நகரத்திலும் அதன் 5G சேவைகளை வழங்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த மாதம், பார்தி ஏர்டெல் தனது 5ஜி சேவையை வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தியது.
ஏர்டெல் 5ஜி பிளஸ் நன்மைகள் என்னென்ன?
ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைகள் கோஹிமா, திமாபூர், ஐஸ்வால், காங்டாக், சில்சார், திப்ருகார் மற்றும் டின்சுகியா ஆகிய இடங்களில் கிடைக்கின்றன. ஏர்டெல் 5ஜி பிளஸ் ஏற்கனவே கவுகாத்தி, ஷில்லாங், இம்பால், அகர்தலா மற்றும் இட்டாநகர் ஆகிய இடங்களில் நேரலையில் உள்ளது. ஏர்டெல் 5ஜி பிளஸ் நன்மைகள் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க்கில் மூன்று நன்மைகள் உள்ளன. அவை சிறந்த குரல் தரம் மற்றும் விரைவான அழைப்பு இணைப்பு நேரங்களுடன் தற்போதைய 4G அனுபவத்தை விட 20-30 மடங்கு வேகமான வேகத்தை வழங்குவதாக ஏர்டெல் உறுதியளிக்கிறது. எனவே, ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வில் தனித்துவமான ஆற்றல் குறைப்பு தீர்வுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது எனக்கூறுகின்றனர்.