இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம்
உங்களால் 6 கோடி ரூபாய் செலவழிக்க முடிந்தால், விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம். 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து, ராக்கெட்டில் அமர்ந்து விண்வெளிக்கு பயணம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து முதல்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனை 2030ம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, தெரிவித்த இஸ்ரோ தலைவர், எஸ் சோம்நாத் கூறுகையில், விண்வெளிக்கு ஒரு பயணத்திற்கான டிக்கெட்டுக்கான செலவு சுமார் ரூ. 6 கோடியாக இருக்கும் என்று கூறினார்.
இந்தியர்கள் விண்வெளிப் பயணம் குறித்த கூடுதல் விவரங்கள்
மேலும், இந்தியாவின் சொந்த விண்வெளி சுற்றுலாத் திட்டம் குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை, பாதுகாப்பானது மற்றும் பயணம் மேற்கொள்பவர்கள் தங்களை விண்வெளி வீரர்கள் என்றும் அழைக்க முடியும் என தெரிவித்துள்ளார். பொதுவாக இது போன்ற சுற்றுலாவில் விண்வெளியின் விளிம்பில் 15 நிமிடங்கள் பயணிகள் செலவிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல, ராக்கெட் கீழே இறங்குவதற்கு முன், குறைந்த புவியீர்ப்பு சூழலில் சில நிமிடங்கள் அனுபவிப்பார்கள். இது மிகவும் புதுமையான அனுபவமாக இருக்கும். விமானங்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் மூலம் இயக்கப்படுகின்றன. இது விமானத்தை வழங்கும் நிறுவனங்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுகின்றது.