உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட போனின் பயன்பாட்டை தடுக்க உதவும் மத்திய அரசின் CEIR
CEIR என்பது ஒரு மத்திய அரசின் அமைப்பாகும். இது மொபைல் சாதனங்களை அவற்றின் சர்வதேச மொபைல் சாதன அடையாள (IMEI) எண்களைப் பயன்படுத்தி நிர்வகிக்கிறது மற்றும் கண்காணிக்கிறது. இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் மொபைல் போன் திருட்டு ஒரு பொதுவான பிரச்சினை. ஸ்மார்ட்போன்களின் பரவலான பயன்பாடு, அவற்றின் அதிக மறுவிற்பனை மதிப்புடன் இணைந்து, அவற்றை திருடர்களின் கவர்ச்சிகரமான இலக்குகளாக ஆக்குகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகள் அல்லது சந்தைகள் அல்லது பொது போக்குவரத்து போன்ற நெரிசலான பொது இடங்களில், மக்கள் திருடர்களிடம் தங்கள் மொபைல் போன்களை பறிகொடுத்திருக்கலாம். இது போன்ற சிக்கலை சமாளிக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை, திருடப்பட்ட மொபைல் போன்களை மீட்பதற்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட CEIR போர்டலை உருவாகியுள்ளது.
CEIR எப்படி செயல்படுகிறது?
CEIR என்பது மொபைல் சாதன அடையாளங்காட்டிகளின் தரவுத்தளமாகும். மொபைல் சாதனத்தின் ஒவ்வொரு சிம் ஸ்லாட்டிற்கும் ஒரு அடையாளங்காட்டி(identifier) ஒதுக்கப்பட்டுள்ளது. Blacklist-ல் உள்ள மொபைல் சாதனங்களைப் பகிர நெட்வொர்க் ஆபரேட்டர்களை அனுமதிப்பதன் மூலம் மொபைல் சாதன திருட்டு மற்றும் தவறான பயன்பாட்டை எதிர்த்து CEIR உதவுகிறது. அதாவது, ஒரு நெட்வொர்க்கில் தடுப்புப்பட்டியலில் உள்ள சாதனம், சிம் கார்டு மாற்றப்பட்டாலும், மற்ற நெட்வொர்க்குகளில் வேலை செய்யாது.
CEIR தளத்தில் புகாரை பதிவு செய்வது எப்படி?
உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட ஃபோனைப் பற்றி போலீஸ் புகார் (எஃப்ஐஆர்) பதிவு செய்யுங்கள். CEIR தாக்கல் செயல்முறைக்கு உங்களுக்கு ஒரு FIR நகல் தேவைப்படும். உங்கள் ஃபோனின் IMEI (சர்வதேச மொபைல் சாதன அடையாளம்) எண்ணைக் கண்டறியவும். நீங்கள் வழக்கமாக அதை பேட்டரிக்கு பின்னால் ஒரு ஸ்டிக்கரில் காணலாம். உங்களால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், IMEI எண்ணைப் பெற உங்கள் தொலைபேசியில் *#06# ஐ டயல் செய்யலாம் (இப்போது உங்களிடத்தில் போன் இருந்தால்). CEIR போர்ட்டலுக்கு செல்லவும். அங்கே, "Block Stolen/Lost Mobile" என்ற சிவப்பு டேப்-ஐ கிளிக் செய்யவும். ஒரு படிவம் தோன்றும். அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பவும்.