டிசம்பர் 19ல் வெளியாகிறது 'நூபியா Z60 அல்ட்ரா' ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
சீனாவைச் சேர்ந்த நூபியா நிறுவனம், தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான Z60 அல்ட்ராவின் உலகளாவிய வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது. அதன்படி, வரும் டிசம்பர் 19ம் தேதியன்று, Z60 அல்ட்ராவின் உலகளாவிய வெளியீட்டைத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். முக்கியமாக சீனாவிலும் அன்றைய தினமே அந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய Z60 அல்ட்ராவில், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட, 6.8 இன்ச் 1.5K LTPO OLED டிஸ்பிளேவைப் பயன்படுத்தியிருக்கிறது நூபியா. பன்ச் ஹோல் கூட இல்லாத முழுமையான ஸ்கிரீனை இந்த ஸ்மார்ட்போனில் வழங்கியிருக்கிறது அந்நிறுவனம். செல்ஃபி கேமராவை இன் டிஸ்பிளேவாகக் கொடுத்திருக்கிறது நூபியா.
நூபியா Z60 அல்ட்ரா:
இந்தப் புதிய ஃப்ளாக்ஷிப்பில், குவால்காமின் தற்போதைய ஃப்ளாக்ஷிப் சிப்பான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை வழங்கியிருக்கிறது அந்நிறுவனம். மேலும், 24GB வரையிலான ரேம் மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் வசதியையும் புதிய ஸ்மார்ட்போனில் அளித்திருக்கிறது நூபியா. பின்பக்கம் 50MP முதன்மை கேமரா, 50MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்பக்கம் 16MP இன்-டிஸ்பிளே செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட மைஓஎஸ் இயங்குதளத்தைப் பெற்றிருக்கும் இந்த நூபியா Z60 அல்ட்ரா ஸ்மார்ட்போனில், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 6,000mAh பேட்டரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.