ஒரு நபர் நாளொன்று சராசரியாக எவ்வளவு டேட்டாவை பயன்படுத்துகிறார்? ஆய்வறிக்கை
கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு பயனரின் சராசரி இணைய செயல்பாடு 19.5 ஜிபியை எட்டியுள்ளது என அறிக்கையை வெளியிட்டுள்ளனர். நோக்கியாவின் வருடாந்திர மொபைல் பிராட்பேண்ட் இண்டெக்ஸ், அறிக்கையின்படி, இந்தியாவில் மொபைல் டேட்டா டிராஃபிக் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3.2 மடங்கு அதிகரித்து, மாதத்திற்கு 14 எக்சாபைட்டுகளை எட்டியுள்ளது. மேலும், வயர்லஸ் இணைய சேவையில் இந்தியாவின் முதலீடு 2027ல் கிட்டத்தட்ட 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் மொபைல் டேட்டா டிராஃபிக் 3.2 மடங்கு உயர்ந்துள்ளது என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
தனி நபர் ஒருவர் மாதத்திற்கு 19.5ஜிபி டேட்டாவை பயன்படுத்துகிறார்
அதேப்போல், 2018iல் 4.5 எக்சாபைட்கள் இருந்த அகில இந்திய மொபைல் டேட்டா பயன்பாடு, 2022ல் 14.4 எக்சாபைட்டுகளாக அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பயனரின் சராசரி தரவு நுகர்வு 2018 முதல் 'வெகுவாக' உயர்ந்துள்ளது என்றும் இது 2022ல் ஒரு பயனருக்கு மாதத்திற்கு 19.5 ஜிபியை எட்டியுள்ளது என தெரியவந்துள்ளது. 2018இல் ஒரு பயனரின் சராசரி மாதாந்திர டேட்டா ட்ராஃபிக் 9.7 ஜிபியாக இருந்தது. இதுவே 2022ல் 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில், இந்தியாவில் நுகரப்படும் மொத்த மொபைல் டேட்டா 2024ஆம் ஆண்டளவில் இருமடங்காக அதிகரிக்கும் என்றது நோக்கியாவின் அறிக்கை கூறுகிறது.