Loading...
ஓவன் இன்றி வீட்டுக் கடாயில் சுவையான சாக்லேட் கேக் தயாரிக்கும் முறை!
வீட்டு கடாயில் சுவையான சாக்லேட் கேக் தயாரிக்கும் குறிப்புகள்

ஓவன் இன்றி வீட்டுக் கடாயில் சுவையான சாக்லேட் கேக் தயாரிக்கும் முறை!

எழுதியவர் Vasuki
Jul 18, 2026
04:23 pm

செய்தி முன்னோட்டம்

நிறைய பேருக்கு கேக் சாப்பிட ரொம்பப் பிடிக்கும். ஆனால், சில சமயம் கடைகளில் வாங்கும் கேக்குகளில் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லாத சில கெமிக்கல்களும், செயற்கையான சுவைகளும் சேர்க்கப்பட்டிருக்கும். அதனால், நாமே வீட்டிலேயே கேக் செய்து சாப்பிடுவது உடலுக்கும் நல்லது, மனதிற்கும் திருப்தி தரும். இதனைச் செய்வதற்கு அதிக நேரமும் ஆகாது, ஓவனும் தேவையில்லை. இன்று, நம் சமையலறையில் இருக்கும் கடாயிலேயே ரொம்ப சுலபமாகச் செய்யக்கூடிய சாக்லேட் கேக் செய்முறையைப் பார்க்கலாம் வாங்க.

பொருட்கள்

சாக்லேட் கேக் செய்ய தேவையான பொருட்கள்

1) ஒரு கப் மைதா

2) அரை கப் சர்க்கரை (பொடியாக்கியது)

3) அரை கப் பால்

4) கால் கப் வெண்ணெய் (மென்மையானது)

5) ஒரு டேபிள்ஸ்பூன் வினிகர்

6) ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர்

7) ஒரு டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

8) கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா

9) இரண்டு டேபிள்ஸ்பூன் கோகோ பவுடர்

10) சிறிதளவு சாக்லேட் சாஸ் அல்லது சாக்லேட் க்ரீம் (அலங்கரிக்க)

படி-1

கேக் செய்ய ஆரம்பிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

இப்போது இதில் பால், வினிகர், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்குங்கள்.

அடுத்ததாக, மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாகச் சலித்து, இந்தத் திரவக் கலவையுடன் சேர்த்து, கட்டிகள் ஏதும் இல்லாமல் மென்மையாகக் கலந்து விடுங்கள்.

கேக் செய்யத் தயாரிக்கும் இந்த மாவு, பசை போலத் தடிமனாக இல்லாமல், கட்டிகளற்ற மென்மையான பதத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும்.

ADVERTISEMENT

படி-2

கேக் மாவு தயாரிக்கும் முறை

இப்போ, கேக் மாவு தயாரிப்பதற்காக, ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு, இதனுடன் உருக்கிய வெண்ணெய், பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மெதுவாகக் கலந்து விடுங்கள்.

இந்தச் சேர்மானத்தை, கட்டிகள் ஏதுமில்லாத மிருதுவான மற்றும் சரியான பதத்திலான கேக் மாவாக மாறும் வரை ஒரு விஸ்க் அல்லது கரண்டி கொண்டு நன்றாக அடித்துக் கலக்க வேண்டும்.

ADVERTISEMENT

படி-3

கடாயில் கேக்கை வேக வைக்கும் முறை

ஒரு அடி கனமான கடாயில் தூள் உப்பைச் சமமாகப் பரப்பி சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் முன்கூட்டியே சூடுபடுத்துங்கள்.

பிறகு கடாயின் உள்ளே ஒரு சிறிய ஸ்டாண்ட் அல்லது தட்டை தலைகீழாக வைத்து, அதன் மேல் நாம் தயார் செய்து வைத்துள்ள கேக் கலவை இருக்கும் பேக்கிங் பேனைவையுங்கள்.

இப்போது கடாயை ஒரு மூடி போட்டு காற்று வெளியேறாதவாறு மூடி, மிதமான தீயில் 30 முதல் 35 நிமிடங்கள் வரை வேக விடுங்கள்.

கேக் நன்றாக வெந்ததும், அதை வெளியே எடுத்து முழுமையாக ஆறவிடுங்கள். பின்னர், அதன் மேல் சுவையான சாக்லேட் சாஸ் அல்லது கிரீம் ஊற்றி அலங்கரித்துப் பரிமாறுங்கள்.

அலங்காரம்

கேக்கை அலங்கரிக்கும் எளிய முறைகள்

உங்களிடம் கேக்கை அலங்கரிப்பதற்கென்று பிரத்யேகமான பொருட்கள் எதுவும் இல்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை.

ஏனெனில், எந்தவித அலங்காரமும் இல்லாமலேயே இந்த ஹோம்மேட் சாக்லேட் கேக் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

ஆனால், நீங்கள் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாக மாற்ற விரும்பினால், கேக்கின் மேல் அடுக்கில் சாக்லேட் கிரீம் அல்லது சாக்லேட் கணாஷ் தடவி, அதன் மேல் பூசணி விதைகள், பொடியாக நறுக்கிய உலர் பழங்கள், உலர் திராட்சை அல்லது சாக்லேட் சிப்ஸ் ஆகியவற்றைத் தூவி அழகாக அலங்கரிக்கலாம்.

இது தவிர, நன்றாக ஆறிய இந்தச் சாக்லேட் கேக் துண்டுகளை, ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீமுடன்சேர்த்து "ஹாட் அண்ட் கோல்ட்" காம்போவாகவும் பரிமாறலாம். இது சாப்பிடுவதற்கு இன்னும் அட்டகாசமாக இருக்கும்!

ADVERTISEMENT