NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உலக தொலைக்காட்சி தினம் இன்று; எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக தொலைக்காட்சி தினம் இன்று; எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
    உலக தொலைக்காட்சி தினம் இன்று; எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

    உலக தொலைக்காட்சி தினம் இன்று; எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 21, 2023
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்றைய தினமானது உலகெங்கிலும் இருக்கும் அனைத்து நாடுகளிலும், அனைத்து வீடுகளிலும், இந்தியாவின் அனைத்துக் குடும்பங்களிலும் இன்றியமையாத மின்னணு சாதனமாக உருவெடுத்து நிற்கும் தொலைக்காட்சியைக் கொண்டாடுவதற்கான நாள்.

    ஆம், 'உலக தொலைக்காட்சி தினம்' இன்று. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ம் தேதி உலக தொலைக்காட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

    உலகளவில் சமூகத்திலும், அரசியலிலும் தொலைக்காட்சி ஏற்படுத்திய மற்றும் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை அங்கீகரிக்கும் விதமாகவும், தொலைக்காட்சி எந்தளவிற்கு நம்முடைய வாழ்க்கியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளம் வகையில் ஒவ்வொரும் ஆண்டும் நவம்பர் 21ம் நாளை உலக தொலைக்காட்சி தினமாகக் கொண்டாட 1996ம் ஆண்டு அங்கீகரித்தது ஐநா பொதுச்சபை.

    தொலைக்காட்சி

    தொலைக்காட்சியின் உருவாக்கம்: 

    பிற மின்னணு சாதனங்களைப் போல தொலைக்காட்சியினை குறிப்பிட்ட ஒருவர் தான் கண்டறிந்தார் எனக் கூற முடியாது. ஏனெனில், பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு நபர்கள் இன்றைய தொலைக்காட்சியின் உருவாக்கத்திற்கு உதவி புரிந்திருக்கிறார்கள்.

    எனினும், தொடக்கக் கால தொலைக்காட்சியின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்களாக இருவர் குறிப்பிடப்படுகிறார்கள்.

    ஒருவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் லோகி பாய்ர்டு, இவரே தொலைக்காட்சியின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். மெக்கானிக்கல் தொலைக்காட்சியை உருவாக்கியவர் இவர்.

    இன்னொருவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிலே டெய்லர் பிரான்ஸ்வொர்த், இவர் 1927ல் முதன்முதலாக எலெக்ட்ரிகல் தொலைக்காட்சியை செயல்படுத்திக் காட்டியவர். முதன் முதலில் ரேடியோ அலைகளின் உதவியுடனேயே தொலைக்காட்சியின் இயக்கம் இருந்திருக்கிறது.

    தொழில்நுட்பம்

    தொலைக்காட்சியின மேம்பாடு: 

    1920-களில் தொலைக்காட்சி என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது, அவ்வளவு தான். தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு 1950-களில் தான் நவீன தொலைக்காட்சிக்கான வித்து ஊன்றப்பட்டது.

    பல்வேறு நபர்கள் நவீன தொலைக்காட்சியின் மேம்பாட்டிற்கு வித்திட்டிருக்கிறார்கள். மேலும், தொழில்நுட்பம் வளர வளர தொலைக்காட்சியின் வடிவமும், செயல்பாடும் சேர்ந்தே மாறியது.

    கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்ட தொலைக்காட்சிகள் தற்போது மிகவும் ஸ்மார்ட்டாக வந்து நிற்கின்றன. பொழுதுபோக்கு அம்சத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை தான் தொலைக்காட்சிகள். ஆனால், சமூகத்தில் அவை பெரிய பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

    சமூகம்

    சமூகத்தில் தொலைக்காட்சியின் தாக்கம்: 

    முதலில் பொழுதுபோக்கிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டாலும், பின்னர் மிகச்சிறந்த தகவல் தொடர்பு சாதனமாகவும் பயன்பட்டவை தொலைக்காட்சிகள் தான்.

    எந்தவொரு நாட்டில் என்ன சம்பவம் நிகழ்ந்தாலும், அதனை நம்முடைய வீட்டிலுள்ள திரையில் பார்க்க முடியும் என்பது சாதாரண விஷயமா என்ன.

    ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே வாழ்ந்து பழக்கப்பட்ட மனித சமூகத்துக்கு, எல்லைகளைக் கடந்து பல்வேறு நாடுகள், மதங்கள், கலாச்சாரங்கள் குறித்த முதல் புரிதல் தொலைக்காட்சியின் மூலமே ஏற்படுகிறது.

    புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது முதல் நமக்கான உரிமைகள் குறித்து தெரிந்து கொள்வது வரை பல்வேறு நேரங்களில் நமக்கு அது ஆசானாகவும் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது.

    இந்தியா

    இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு: 

    இந்தியாவில் தொலைக்காட்சி என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த ஆய்வு ஒன்றை இந்திய ஒளிபரப்பு மன்றம் 2012ம் ஆண்டே நடத்தியது.

    அந்த ஆய்வின் முடிவில், தொலைக்காட்சிகள் தங்களுடைய வாழ்வில் நேர்மறையான பல மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாவும், நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட உதவியிருப்பதாகவுமே பலரும் அந்த ஆய்வில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    முக்கியமாக, தங்களுடைய படிப்பு குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், அதுகுறித்த முடிவுகளை எடுப்பதற்கும் தொலைக்காட்சி உதவியதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

    சுய மேம்பாடு அடைய, சமூக பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்ள, புதிய வாய்ப்புகள் குறித்த தெரிந்து கொள்ள, விழிப்புணர்வு பெற மற்றும் புத்துணர்ச்சி பெற என தங்கள் வாழ்வில் தொலைக்காட்சி நேர்மறை தாக்கங்களையே அதிகம் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

    பொருளாதாரம்

    இந்தியாவின் தொலைக்காட்சிப் பொருளாதாரம்: 

    இந்திய பொருளாதாரத்தில் தொலைக்காட்சித் துறை எந்தளவிற்கு பங்களிக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ள 2017ம் ஆண்டு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    அன்றைய தேதியிலேயே இந்தியா பொருளாதாரத்தில் சுமார் ரூ.73,000 கோடி மதிப்பிற்து நேரடித் தாக்கத்தையும், ரூ.1.54 லட்சம் கோடி மதிப்பிற்கு மறைமுகத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    மேலும், தொலைக்காட்சித் துறையானது நேரடியாக 2017ம் ஆண்டிலேயே 4.93 லட்சம் வேலைவாய்ப்புகளையும், மறைமுகமாக 16.44 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது.

    இந்தியாவில் சினிமாவை விட பெரிய துறை தொலைக்காட்சித் துறை தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

    தினசரி பலதரப்பு மக்களின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தி வரும் தொலைக்காட்சியை நாமும் இந்த தினத்தில் கொண்டாடலாமே.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    ஐநா சபை
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உலகம்

    கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம்  விபத்து
    இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து  'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்  இஸ்ரேல்
    உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள்  சீனா
    இந்தியர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு செல்லலாம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய நடவடிக்கை தாய்லாந்து

    ஐநா சபை

    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை உலகம்
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா
    சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா  உலகம்

    இந்தியா

    சல்மான் ருஷ்டி முதன்முதலில் அமைதியை சீர்குலைத்ததற்காக வாழ்நாள் சாதனை விருதை பெற்றார் அமெரிக்கா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  வங்க கடல்
    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன? உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025