Page Loader
உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்: இந்த சிக்கலான மனநல நிலை பற்றிய தகவல்! 
உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்

உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்: இந்த சிக்கலான மனநல நிலை பற்றிய தகவல்! 

எழுதியவர் Arul Jothe
May 24, 2023
06:13 pm

செய்தி முன்னோட்டம்

ஸ்கிசோஃப்ரினியா என்பது பலருக்கு புரியாத ஒரு சிக்கலான மன ஆரோக்கியம் சார்ந்த மனநல நோய். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், தனியாக உணர்கிறார்கள் & சில பாகுபாடுகளை எதிர்கொள்கிறார்கள். உலக ஸ்கிசோஃப்ரினியா விழிப்புணர்வு தினம், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது. ஸ்கிசோஃப்ரினியா என்றால் என்ன? ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு மனநல கோளாறு ஆகும். இது ஒரு நபரின் மனதை பெரிதும் பாதிக்கிறது. அவர்கள் உண்மையில் இல்லாத விஷயங்களைக் கேட்கவோ, பார்க்கவோ தொடங்கலாம் மற்றும் விசித்திரமான எண்ணங்களைக் கொண்டிருக்கலாம். அது அவர்கள் ஒரு யதார்த்த உலகில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. பொதுவாக, இந்த மனநிலை, ஒரு நபர் அவரின் இருபதுகளில் இருக்கும்போது தொடங்குகிறது, ஆனால் சில சமயங்களில் முன்னதாகவே கூட தோன்றலாம்.

World Schizophrenia Day 

உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்

ஆச்சரியப்படும் விதமாக, உலகம் முழுவதும் சுமார் 24 மில்லியன் மக்கள் இந்த நிலையில் உள்ளனர். இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்: 1984 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு (WHO) ஸ்கிசோஃப்ரினியா மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களுக்கான குழுக்கள் உலக ஸ்கிசோஃப்ரினியா தினத்தை அனுசரிக்க வேண்டுமென தீர்மானித்தது. குறிக்கோள்: இந்நாளில், ஸ்கிசோஃப்ரினியா குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கவும், பொதுமக்களுக்கு அதனை உணர்த்தவும், மனநல ஆலோசகர்கள் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், உலக ஸ்கிசோஃப்ரினியா தினத்திற்கு ஒரு சிறப்பு தீம் உள்ளது. 2023 ஆம் ஆண்டில், "சமூக கருணையின் ஆற்றலைக் கொண்டாடுதல்" என்ற தீமை மையமாகக் கொண்டது. 2022 ஆம் ஆண்டின் தீம் "கறையை உடைத்தல், எங்கள் கதைகளைப் பகிர்தல்" என்பதாகும்.