Page Loader
சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்: உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்
சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம் இன்று

சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்: உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்

எழுதியவர் Venkatalakshmi V
May 17, 2023
09:06 am

செய்தி முன்னோட்டம்

இன்று உலக உயர் இரத்தஅழுத்தம் தினம். ஆண்டுதோறும், மே-17 அன்று, இது அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து இரத்தத்தின் அழுத்தத்தை அளவிடுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். உலக சுகாதார அமைப்பின் படி, உங்கள் இரத்த நாளங்களில், அழுத்தம் அதிகமாக இருக்கும் போது(140/90 mmHg மற்றும் அதற்கு மேல்), அது உயர் இரத்தஅழுத்தம் என கருதப்படுகிறது. இது சாதாரண நிலையாக ஆரம்பத்தில் தோன்றினாலும், முறையான சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். உயர் ரத்தஅழுத்தத்தின் அறிகுறிகள்: பொதுவாக இதற்கான அறிகுறிகள் வெளியே தெரியாது என்றாலும், ஒருசிலருக்கு பின்வரும் அறிகுறிகள் தோன்றலாம். கடுமையான தலைவலி, நெஞ்சு வலி, சுவாசக் கஷ்டங்கள், மயக்கம், கவலை, குழப்பம், குமட்டல், வாந்தி, பார்வை மாறுகிறது, மூக்கடைப்பு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு.

card 2

ரத்த அழுத்தத்தின் காரணங்களும், தடுப்பு முறைகளும் 

வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் மோசமான உணவுப் பழக்கம் போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற சில மருத்துவ நிலைகளும், உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம். சில சந்தர்ப்பங்களில், கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். தடுப்பு முறைகள்: தினசரி வாழ்க்கை முறை மாற்றங்களினால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் உட்கொள்ளலை அதிகரிக்கவும். தினசரி உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம். உயர் ரத்தஅழுத்தம் இருக்கும் போது, அதிக அளவு உப்பை தவிர்க்கவும். மது மற்றும் புகையிலையை தவிர்க்கவும்.கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.