உலக மூளைக் கட்டி தினம் 2023: அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்
செய்தி முன்னோட்டம்
உலக மூளைக் கட்டி தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
மூளைக் கட்டிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
"உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் - மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்" என்பது இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும்.
மூளையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியால் மூளைக் கட்டிகள் வகைப்படுத்தப்படுகின்றன.
மூளையின் எந்தப் பகுதியிலும் கட்டிகள் வளரலாம். மூளைக்குள் கட்டி வளரும்போது, அது அந்த பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மூளைக் கட்டிகள் பெரும்பாலும் மற்ற பகுதிகளுக்கு பரவுவதில்லை. மூளையில் கட்டி என்றாலே அது கேன்சராக மாறிவிடுமோ என்று பலர் பயப்படுகிறார்கள்.
முதலில் பயம் வேண்டியதில்லை. ஏனென்றால், தற்போது அனைத்து வகையான கட்டிகளுக்கும் சிகிச்சைகள் உண்டு.
World Brain Tumour Day
அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்
மூளையில் உருவாகும் 30 முதல் 40% கட்டிகள் கேன்சராக இருக்காது. அது சாதாரண கட்டிகளே.
மூளைக் கட்டிகளை சாதாரண மற்றும் வீரியம் மிக்க கட்டிகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
மூளையின் ஒரு முக்கிய பகுதியில் கட்டி வளரும் போது, அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
செவித்திறன் இழப்பு, நினைவாற்றல் இழப்பு, குழப்பம், நடத்தை மாற்றங்கள், தலைச்சுற்றல் மற்றும் வலிப்பு ஆகியவை மூளையில் கட்டி ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்.
நரம்பியல் பரிசோதனை, பயாப்ஸி மற்றும் மூளை ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் மூளையில் ஏற்படும் கட்டிகளைக் கண்டறிகின்றனர்.
அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, ஸ்டெராய்டுகள், வலிப்பு எதிர்ப்பு மருந்து, வென்ட்ரிகுலர் பெரிட்டோனியல் ஷன்ட், கீமோதெரபி மூலம் இதற்கு சிகிச்சை பெறலாம்.