உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் 2024: லேசான ஆட்டிசம் என்றால் என்ன?
மன ஆரோக்கியம்: ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2ஆம் தேதி, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், ஏப்ரல் மாதம் முழுவதுமே ஆட்டிசம் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்ற மன வளர்ச்சி குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுவதற்கும், ஆட்டிசம் உள்ளவர்களுக்கு ஏற்ற சமூகமாக நமது சமூகத்தை மாற்றுவதற்கும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக, ஆட்டிசத்துடன் வளரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பேச்சு குறைபாட்டுடனும், பிற மன வளர்ச்சி குறைபாட்டுடனும் இருப்பதை மட்டுமே நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், லேசான ஆட்டிசம் கொண்டவர்களும் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் சாதாரண மனிதர்களை போலவே செயல்பட்டாலும், லேசான ஆட்டிசம் கொண்டவர்களுக்கு சமூகத்துடன் ஒன்றி வாழ்வது மிக சிரமமாக இருக்கும்.
லேசான ஆட்டிசம் என்றால் என்ன?
சிலர் சிறு வயதில் இருந்தே படிப்பு மற்றும் மனப்பாடம் செய்வதில் திறமையானவர்களாக இருந்திருப்பார்கள். மறுபக்கம், சிலர் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைய கூடியவர்களாக இருந்திருப்பார்கள். இந்த காரணத்தினால் தான், லேசான ஆட்டிசம் உள்ளவர்களுக்கு ஆட்டிசம் இருக்கிறது என்பதை கண்டறிவது மிகவும் சிரமமாகும். மேலும், ஆட்டிசம் குறைபாடு என்பது ஒரு ஸ்பெக்ட்ரத்தில் உள்ள குறைபாடாகும். எனவே, ஆட்டிசம் இருக்கும் ஒவ்வொரும் வித்யாசமாக செயல்படுவார்கள். ஒவ்வொருவரின் வாழ்விலும் அது வெவ்வேறு விதமாக தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தான், ஆட்டிசத்தை போன்ற மன வளர்ச்சி குறைபாடுகளை அறிந்திருப்பது அவசியம். நம் வீட்டிலும் சமூகத்திலும் இருக்கும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளையும் பெரியவர்களையும் எப்படி கையாள்வது என்பது அப்போது தான் புரியும்.