Loading...
மனிதர்கள் பேசுவது குறைந்து வருகிறது: அதிர்ச்சி தரும் அறிவியல் ஆய்வு முடிவுகள்; ஸ்மார்ட்போனைத் தாண்டிய அதிர்ச்சி முடிவுகள்
மனிதர்கள் பேசுவது குறைந்து வருவதாக ஆய்வில் தகவல்

மனிதர்கள் பேசுவது குறைந்து வருகிறது: அதிர்ச்சி தரும் அறிவியல் ஆய்வு முடிவுகள்; ஸ்மார்ட்போனைத் தாண்டிய அதிர்ச்சி முடிவுகள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 06, 2026
06:50 pm

செய்தி முன்னோட்டம்

மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சக மனிதர்களுடன் பேசும் வார்த்தைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட கணிசமாகக் குறைந்து வருகிறது. அரிசோனா பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர்கள் நடத்திய விரிவான ஆராய்ச்சியில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. 2005 முதல் 2019 வரையிலான 15 ஆண்டுகளில், ஒரு மனிதன் தினமும் பேசும் சராசரி வார்த்தைகளின் எண்ணிக்கையில் 28 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் பேசும் சொற்களின் அளவு சராசரியாக 338 வார்த்தைகள் வரை குறைந்து கொண்டே வருகிறது.

தானியங்கி அமைப்புகள்

ஸ்மார்ட்போன்கள் மற்றும் தானியங்கி அமைப்புகளின் தாக்கம்

பேச்சுவார்த்தைகள் குறைவதற்குக் மொபைல் போன்களும் சமூக வலைத்தளங்களும் முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டாலும், இயல்பு சூழலில் மனிதர்கள் மேற்கொள்ளும் உரையாடல்கள் தானியங்கி முறைக்கு மாறியதே முதன்மைக் காரணமாகும்.

கடைகளில் பொருட்களுக்கான பணத்தை செலுத்தும் செல்ஃப் செக்அவுட் எந்திரங்கள், ஆன்லைன் உணவு ஆர்டர் செயலிகள் மற்றும் வழிகாட்டும் ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்ப அமைப்புகள் மக்களின் அன்றாட உரையாடல்களை முற்றிலும் அழித்துவிட்டன.

இதன் காரணமாக கடைகளிலும் தெருக்களிலும் அந்நியர்களிடம் பேசி வந்த சிறிய உரையாடல்கள் தற்போது மறைந்துவிட்டன.

அதிர்ச்சி முடிவுகள்

ஆய்வின் போது கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி முடிவுகள்

ஆண்களும் பெண்களும் தினமும் எவ்வளவு வார்த்தைகள் பேசுகிறார்கள் என்ற பழைய ஆய்வை மீண்டும் மறு ஆய்வு செய்தபோது தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

2007 ஆம் ஆண்டின் ஆய்வின்படி ஒரு மனிதர் தினமும் சராசரியாக 15,900 வார்த்தைகளை பேசி வந்தார்.

ஆனால் 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட புதிய தரவுகளின்படி இந்த எண்ணிக்கை 12,700 ஆகக் குறைந்துள்ளது.

சுமார் 2,200 நபர்களிடம் நடத்தப்பட்ட 22 பல்வேறு ஆய்வுகளின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்த பிறகே இந்தத் துல்லியமான முடிவை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

ADVERTISEMENT

குறுஞ்செய்திகள்

குறுஞ்செய்திகள் நேரடிப் பேச்சுக்கு முழுமையான மாற்றாக முடியாது

தொலைபேசியில் டைப் செய்து அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், நேரில் பேசும் பேச்சுக்கு ஒருபோதும் ஈடாக முடியாது என்று உளவியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

நேரில் பேசும்போது மட்டுமே வெளிப்படும் உணர்ச்சிகள், சிரிப்பு, குரல் ஏற்ற இறக்கங்கள் மற்றும் மனித பிணைப்புகள் ஆகியவை குறுஞ்செய்திகளில் கிடைப்பதில்லை.

அன்றாட வாழ்வில் மக்கள் நேரில் பேசுவது குறைந்து கொண்டே வருவதன் காரணமாக, உலகளவில் மனிதர்களிடையே தனிமை மற்றும் மன அழுத்தம் போன்ற சமூகப் பிரச்சனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன.

ADVERTISEMENT