Loading...
அழகிற்கு கிடையாது, உயிர் காக்கும் ரகசியம்! பேனா மூடியில் இருக்கும் சிறிய ஓட்டை எதற்கு தெரியுமா?
பேனா மூடியில் இருக்கும் சிறிய ஓட்டைக்கான காரணம்

அழகிற்கு கிடையாது, உயிர் காக்கும் ரகசியம்! பேனா மூடியில் இருக்கும் சிறிய ஓட்டை எதற்கு தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2026
06:40 pm

செய்தி முன்னோட்டம்

நாம் அனைவரும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் தினமும் பேனாக்களைப் பயன்படுத்தி வருகிறோம். பலவகையான பால்பாயிண்ட் பேனாக்களின் மூடிகளை உற்று நோக்கினால், அதன் மேல் பகுதியில் ஒரு சிறிய ஓட்டை அல்லது துளை இருப்பதைக் காண முடியும். பலரும் இந்த ஓட்டை மை காய்ந்து போகாமல் இருக்க அல்லது டிசைனுக்காக அமைக்கப்பட்ட ஒன்று என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த சிறிய ஓட்டையின் பின்னணியில் உலகளவில் பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றிய ஒரு மிகப்பெரிய அறிவியல் மற்றும் பாதுகாப்பு காரணம் மறைந்துள்ளது.

உயிர் காக்கும் வடிவமைப்பு

குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உயிரைக் காக்கும் வடிவமைப்பு

எழுதுகின்ற பழக்கம் உள்ள பலருக்கு யோசிக்கும் போது அல்லது பதற்றமாக இருக்கும் போது பேனாவின் மூடியைக் வாயில் வைத்து மெல்லும் பழக்கம் இயல்பாகவே இருக்கும்.

குறிப்பாக பள்ளி சிறுவர்கள் பேனா மூடியை வாயில் வைத்து விளையாடும் போது, அது எதிர்பாராதவிதமாகத் தொண்டைக்குள் நழுவி மூச்சுக்குழாயை அடைத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் மூச்சுக்குழாய்க்குள் பேனா மூடி சிக்கினாலும், அதிலுள்ள சிறிய ஓட்டை வழியே தேவையான காற்று தொடர்ந்து நுரையீரலுக்கு செல்ல வழிவகை செய்யப்படுகிறது.

பாதுகாப்பு விதி

பிக் (BIC) நிறுவனம் அறிமுகப்படுத்திய சர்வதேச பாதுகாப்பு விதி

முதன்முதலில் 1991 ஆம் ஆண்டு பிரபல பிரெஞ்சுப் பேனா தயாரிப்பு நிறுவனமான பிக் (BIC) தான் இந்த புரட்சிகரமான மாற்றத்தை அறிமுகப்படுத்தியது.

பேனா மூடியை விழுங்குவதால் ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் திடீர் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக இந்த சிறிய துளையை அவர்கள் தங்களின் தயாரிப்புகளில் கொண்டு வந்தனர்.

இந்த வடிவமைப்பு மூச்சுத்திணறல் ஆபத்துகளை பெருமளவில் குறைத்ததைத் தொடர்ந்து, உலக அளவில் உள்ள அனைத்துப் பேனா தயாரிப்பு நிறுவனங்களும் இந்த முறையை கட்டாய பாதுகாப்பு விதியாக பின்பற்றத் தொடங்கின.

ADVERTISEMENT

அறிவியல் நுட்பம்

காற்றில் உள்ள அழுத்தத்தைச் சமநிலைப்படுத்தும் அறிவியல் நுட்பம்

பேனா மூடியில் ஓட்டை இருப்பதற்கு மற்றொரு தொழில்நுட்பக் காரணமும் உள்ளது.

பேனாவின் மூடியை நாம் அழுத்தி மூடும் போதோ அல்லது வேகமாகத் திறக்கும் போதோ, அதற்குள் காற்று அழுத்தம் மாறுபடும்.

மூடியில் இந்த சிறிய ஓட்டை இல்லையென்றால், காற்று அழுத்த மாறுபாடு காரணமாக மை கசிவது அல்லது மூடியை எளிதாக மூடவும் திறக்கவும் முடியாமல் போவது போன்ற சிரமங்கள் ஏற்படும்.

இந்த சிறிய ஓட்டை காற்றில் உள்ள அழுத்தத்தை சீராக சமநிலைப்படுத்தி, மை கசியாமல் பேனாவைப் பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.

ADVERTISEMENT