NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வெஜ் தாலி சாப்பிடுவது இப்போது மிகவும் காஸ்டலி; ஏன் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெஜ் தாலி சாப்பிடுவது இப்போது மிகவும் காஸ்டலி; ஏன் தெரியுமா?
    அதிக மழைப்பொழிவு காரணமாக அந்த காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது

    வெஜ் தாலி சாப்பிடுவது இப்போது மிகவும் காஸ்டலி; ஏன் தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 07, 2024
    07:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஜூலையில் சைவ தாலிகளின் விலை சற்று அதிகமாகிவிட்டது. ஒரு மாதத்தில் மூன்றில் ஒரு பங்காக இதன் விலை அதிகரித்துள்ளது.

    தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாய் பயிரிடப்படும் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக அந்த காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

    இதன் விளைவாக, வழக்கமான காய்கறிகள் அடங்கிய தாலியின் விலையும் அதிகரித்துள்ளது.

    இந்த திடீர் விலை ஏற்றம் ஏன், எப்படி என்பதைப் புரிந்து கொள்வோம்.

    புள்ளிவிவரங்கள்

    வெஜ் தாலி விலை ரூ. 24.4 இல் இருந்து, ரூ. 37.7ஆக உயர்ந்துள்ளது

    CRISIL இன் ஆகஸ்ட் மாதத்திற்கான ரொட்டி அரிசி விலை (RRR) அறிக்கை, வீட்டில் சமைத்த சைவ தாலியின் விலை ரூ. 24.4இல் இருந்து ரூ.37.7ஆக கடந்த 17 மாதங்களில் உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

    அதேபோல், அசைவ தாலி விலையும் ரூ. 55.6 முதல் ரூ. 66.8க்கு உயர்ந்துள்ளது.

    கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில், சைவம் மற்றும் அசைவ தாலியின் விலைகள் 34% மற்றும் 13% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தக்காளி

    தக்காளியின் விலையேற்றம்

    கிரிசில் விளக்கியபடி, ஜூன் மாதத்தில் ரூ.33 இருந்த தக்காளியின் விலை 233% உயர்ந்து, ஜூலையில் ஒரு கிலோவுக்கு 110 ரூபாய்க்கு விற்கப்பட்டதே, தாலி விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம்.

    இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து உள்ளீட்டு விலையை காரணியாக்கி தாலியின் சராசரி செலவைக் கணக்கிடுகிறார்கள்.

    ஒரு வெஜ் தாலியில் ரொட்டி, காய்கறிகள், அரிசி, பருப்பு, தயிர் மற்றும் சாலட் ஆகியவை அடங்கும்.

    மற்ற காய்கறிகள்

    மற்ற காய்கறிகள் விலை ஏற்றத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

    வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலைகள் கடந்த மாதத்தை விட முறையே 16% மற்றும் 9% அதிகரித்துள்ளதாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

    இது ஒட்டுமொத்த விலை உயர்வையும் அதிகரித்தது.

    மிளகாய் மற்றும் சீரகத்தின் விலைகள், மாதாந்திர அடிப்படையில் 69% மற்றும் 16% அதிகரித்தாலும், உணவு தயாரிப்பில் சிறிய அளவு பயன்பாடு காரணமாக தாலி செலவில் அவற்றின் தாக்கத்தை மட்டுப்படுத்தியது என, CRISIL விளக்கியது.

    அசைவ தாலி

    கோழிக்கறி விலை சரிவினால் அசைவ தாலியின் விலை சீரானது

    அசைவ உணவு உண்பவர்களுக்கு, பிராய்லர் கோழி விலையில் மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை சரிந்துள்ளதால், இது தாலி செலவுகளை குறைத்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

    கூடுதலாக, தாவர எண்ணெய் விலையில் மாதாந்திர இரண்டு சதவீதம் குறைவு ஒட்டுமொத்த தாலி விலை உயர்விலிருந்து ஓரளவு நிவாரணம் அளித்தது.

    இது தொடர்ந்து மூன்றாவது மாதமாக தாலி விலை பணவீக்கத்தை குறிக்கிறது என்று CRISIL அறிக்கை எடுத்துக்காட்டுகிறது .

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உணவு பிரியர்கள்
    உணவு குறிப்புகள்
    விலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உணவு பிரியர்கள்

    புரட்டாசி ஸ்பெஷல்: 'ஈரோடு அம்மன் மெஸ்' புகழ் ஜப்பான் காலிபிளவர் செய்முறை  புரட்டாசி
    புரட்டாசி ஸ்பெஷல்- வீட்டிலேயே செய்யலாம் மொறு மொறு சில்லி சப்பாத்தி உணவு குறிப்புகள்
    சுவையான ப்ரோக்கோலி சுக்கா வறுவல் செய்வது எப்படி? ஆரோக்கியம்
    புரட்டாசி ஸ்பெஷல்: ஸ்ரீரங்கம் கோவில் ஸ்பெஷல் அக்காரவடிசல் செய்வது எப்படி? புரட்டாசி

    உணவு குறிப்புகள்

    சமையல் குறிப்பு: வீகன் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி? சமையல் குறிப்பு
    புரட்டாசி ஸ்பெஷல்: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா செய்ய, இதோ ரெசிபி புரட்டாசி
    புரட்டாசி ஸ்பெஷல்: இந்த வாரம் வெஜிடேரியன் ஷீக் கெபாப் செய்து பாருங்கள்  புரட்டாசி
    இந்த வீக்கெண்ட், செட்டிநாடு சைவ கோலா உருண்டை செய்து அசத்துங்கள்! சைவம்

    விலை

    உஜ்வாலா திட்டம் - சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு  மத்திய அரசு
    சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு - இன்றைய நிலவரம்  சென்னை
    '3.9 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்குகின்றனர்' - ஆவின் நிறுவனம்  ஆவின்
    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு  எரிவாயு சிலிண்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025