NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ரெயின்போ டயட் என்றால் என்ன? வண்ணமயமான உணவுகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரெயின்போ டயட் என்றால் என்ன? வண்ணமயமான உணவுகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
    ரெயின்போ டயட் என்றால் என்ன?

    ரெயின்போ டயட் என்றால் என்ன? வண்ணமயமான உணவுகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 01, 2023
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    எடைகுறைப்பிற்கு பல்வேறு டயட் முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. கீட்டோ டயட், பேலியோ டயட், இன்டெர்மிட்டன்ட் எனப்படும் இடைப்பட்ட உண்ணாவிரத முறை, லோ- கார்ப் டயட் என பலவகைகள் உள்ளது.

    அவற்றுள் ஒன்று தான் இந்த ரெயின்போ டயட். அதாவது பலவண்ணங்களை உடைய காய்கறிகளையும், பழங்களையும் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.

    ஒவ்வொரு நாள், ஒவ்வொரு வண்ணம் என முறைப்படுத்தி கடைபிடிக்கப்படும் டயட் தான், ரெயின்போ டயட்.

    ஒவ்வொரு வண்ணமும், ஒவ்வொரு உடல் பாகம் மற்றும் ஆற்றலுடன் தொடர்புடையது என்றும், அது ஒவ்வொரு ஊட்டச்சத்தை தருகிறது என்றும் கூறுகிறார்கள் இந்த வகை டயட் முறையை பின்பற்றுபவர்கள்

    card 2

    ரெயின்போ டயட் பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் 

    அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது எப்போதுமே ஒரு நல்ல யோசனையாக இருந்தாலும் , பலவிதமான வண்ணங்களை சாப்பிடுவதில் கவனம் செலுத்துவது, உங்கள் ஆரோக்கியத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயனளிக்கும்.

    இந்த டயட் முறையால், உங்கள் உடலுக்கு பலவிதமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் கிடைக்கிறது.

    மேலும் இவ்வகை டயட் முறையில் அதிகப்படியான காய்கறிகளும், பழங்களும் உட்கொள்ளவதால், தேவையற்ற கொழுப்புகள் நீக்கப்பட்டு, உடல்எடை குறைகிறது. இதிலுள்ள நார்ச்சத்தும், புரத சத்தும், உங்கள் பசியை குறைக்கிறது. அதோடு, பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டுள்ளதால், உங்கள் ஆரோக்கியம் மேம்படுகிறது.

    card 3

    நிறங்களும், நன்மைகளும் 

    சிவப்பு: தக்காளி, தர்பூசணி, கொய்யா மற்றும் திராட்சை பழங்கள்- ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் ஏ,சி, மற்றும் கே 1 நிறைந்துள்ளது. அதனால், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், இதய ஆரோக்கியம், சரும பாதுகாப்பு மேம்படும். அதோடு, சில புற்றுநோய்களின் ஆபத்தை குறைக்கலாம்.

    ஆரஞ்சு மற்றும் மஞ்சள்: கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, மஞ்சள் குடைமிளகாய், வாழைப்பழங்கள், பரங்கிக்காய், அன்னாசி மற்றும் சோளம்- நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உங்கள் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், இதய ஆரோக்கியம் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்க்கிறது.

    card 4

    நிறங்களும், நன்மைகளும் 

    பச்சை: கீரை, பாவக்காய், ப்ரோக்கோலி, பட்டர் ஃப்ரூட், பீன்ஸ், பச்சை பயறு, முட்டைகோஸ்-நார்ச்சத்து, ஃபோலேட், வெளிமம் (மக்னீஷியம்), பொட்டாசியம், வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) மற்றும் வைட்டமின் கே1 நிறைந்துள்ளது. இதனால், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் கிடைக்கும், அதோடு புற்று நோய், இதய நோய் அபாயத்தை நீக்கலாம்.

    நீலம் மற்றும் ஊதா: ப்ளூபெர்ரி, பிளாக் பெர்ரி, கத்திரிக்காய் மற்றும் ப்ளம்ஸ்- நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் B6 , சி மற்றும் கே 1 நிறைந்துள்ளது. அதனால், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை, மூளை செயல்பாடு அதிகரிப்பு, ஆகியவற்றோடு நரம்பியல் கோளாறு, டைப் 2 நீரிழிவு மற்றும் புற்றுநோய்கள் ஆபத்தை குறைக்கலாம்.

    card 5

    நிறங்களும், நன்மைகளும் 

    அடர் சிவப்பு: பீட்ரூட்கள்- நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் B6 நிறைந்துள்ளது. அதனால், ஆக்சிஜன் அதிகரிப்பு மூலம் தடகள செயல்திறனை அதிகரிக்கும், அதோடு, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவும்

    வெள்ளை மற்றும் பழுப்பு: காலிஃபிளவர், பூண்டு, வெங்காயம், காளான்கள், முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கு - இதில், நார்ச்சத்து, ஃபோலேட், வெளிமம், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் B6 மற்றும் கே1 நிரம்பியுள்ளது. இது, அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கவும், ஆக்ஸிஜனேற்றம் தரவும், உங்கள் பெருங்குடல் மற்றும் பிற புற்றுநோய்களின் ஆபத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யவும் உதவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டயட்
    உடல் ஆரோக்கியம்
    உடல் நலம்
    உடல் பருமன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டயட்

    டீடாக்ஸ் டயட், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த உணவுமுறைப் பழக்கமா? ஊட்டச்சத்து

    உடல் ஆரோக்கியம்

    அதிகரித்து வரும் கொரோனா: உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள் கொரோனா
    இன்று சர்வதேச பார்கின்சன் தினம் 2023: இந்த மூளைக் கோளாறுக்கான அறிகுறிகள் என்னென்ன? உடல் நலம்
    கொளுத்தும் வெயில்; கொட்டும் வியர்வை; சமாளிக்க குட்டி டிப்ஸ்   சுற்றுலா
    கோடை வெயிலை சமாளிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் ட்ரிங்க்ஸ்  ஆரோக்கியம்

    உடல் நலம்

    உங்கள் ஆரோக்கியத்தின் ட்ரைலர் உங்கள் நாக்கில் இருக்கிறது, தெரியுமா? ஆரோக்கியம்
    ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நிறுவனங்கள் செய்யவேண்டியவை உடல் ஆரோக்கியம்
    உலக கல்லீரல் தினம் 2023: ஆல்கஹால் அற்ற கல்லீரல் கொழுப்பு நோய்க்கான காரணங்கள் உடல் ஆரோக்கியம்
    சுட்டெரிக்கும் வெயில் காலம்; சமாளிக்க நல்லெண்ணெய் குளியல் அவசியம் ஆரோக்கியம்

    உடல் பருமன்

    உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில விளையாட்டுகள் ஆரோக்கியம்
    கலோரி பற்றாக்குறை: எடை இழக்கும் போது நீங்கள் கண்காணிக்க வேண்டிய முக்கிய மெட்ரிக் ஆரோக்கியம்
    உலக உடல் பருமன் தினம் 2023: எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த 8 வாழ்க்கை முறை மாற்றங்கள் மன அழுத்தம்
    அரிசி vs கோதுமை: எடை இழப்பிற்கு சிறந்த உணவு எது ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025