NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / புத்தாண்டு ஈவ்-ஐ வீட்டில் சிறப்பாக கொண்டாட சில ஐடியாக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புத்தாண்டு ஈவ்-ஐ வீட்டில் சிறப்பாக கொண்டாட சில ஐடியாக்கள்
    புத்தாண்டு ஈவ்-ஐ வீட்டில் சிறப்பாக கொண்டாட சில ஐடியாக்கள்

    புத்தாண்டு ஈவ்-ஐ வீட்டில் சிறப்பாக கொண்டாட சில ஐடியாக்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 29, 2023
    07:41 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆண்டு நிறைவடையும் போது, ​​புத்தாண்டை வீட்டில் கொண்டாடுவது, உங்கள் படைப்பாற்றலை புகுத்த ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

    இந்த புத்தாண்டின் இரவு, அதாவது ஞாயிற்று கிழமை இரவு, உங்கள் குடும்பத்தாருடனோ, நண்பர்களுடனோ புத்தாண்டு ஈவ்-ஐ கொண்டாட திட்டமிட்டுளீர்களா?

    உங்கள் சொந்த வீட்டில் வசதியாக புத்தாண்டைக் கொண்டாட சில தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகள் இங்கே உள்ளன.

    card 2

    ஒரு நடன விருந்து

    உங்கள் வரவேற்பறையில், விளக்குகளை அணைத்து இசையை துவங்கி, நடன விருந்தை நடத்துங்கள்.

    இது ஒரு கிளப் இல்லை, நிச்சயமாக. ஆனால் குறைந்த பட்சம் உங்களை நீங்களே ரசிக்கும் அளவிற்கு, உங்கள் நெருங்கிய நண்பர்களைத் தவிர வேறு யாரையும் பற்றி கவலைப்படாமல், சத்தமாக பாடுவதற்கும் தயக்கம் வேண்டாம்.

    அதைச் செய்வதால், உங்களுக்குள் இருக்கும் குழந்தை வெளி கொண்டுவாருங்கள். அது உங்கள் மனநிலையை சுவாரஸ்யமாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

    card 3

    பலூன் ட்ராப் 

    ஹோட்டல்களில் செய்வது போல, பலூன் ட்ராப் செய்து, கொண்டாட்ட பாணியில் புத்தாண்டை வரவேற்கலாம்.

    இது பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வேடிக்கையாக இருக்கலாம்!

    ஷவர் திரைச்சீலை, ஒரு சில பலூன்கள், டேப் மற்றும் பாப் பர்ஸ்டர் ஆகியவற்றைக் கொண்டு வீட்டிலேயே பலூன் பால் ட்ராப்பை உருவாக்கலாம்.

    கடிகார முள் நள்ளிரவைத் தொட்டதும், திரைசீலையை இழுத்து, உங்களையும் உங்கள் விருந்து விருந்தினர்களையும் சுற்றி அனைத்து பலூன்களையும் பறக்கவிடுங்கள்.

    கூடவே பாப் பர்ஸ்டர் வெடித்து புத்தாண்டை வரவேற்கலாம்

    card 4

    விஷிங் சுவரை உருவாக்கவும்

    உங்கள் வீடுகளில் "விஷிங் வால்" என்ற டைம்ஸ் ஸ்கொயர் பாரம்பரியத்தை உருவாக்கலாம்.

    உங்கள் வீட்டு விருந்தினர்கள், தங்கள் விருப்பங்களை ஸ்டிக் நோட்ஸ்-இல் எழுதி, அதை ஓடுவதற்கு ஒரு இடத்தை ஒதுக்கி DIY "விஷிங் வால்" உருவாக்கவும்.

    வெவ்வேறு வண்ணங்களில் ஸ்டிக்கி நோட்ஸ், சில கலர் மார்கர் பென்ஸ் போன்றவற்றை ஓர் இடத்தில் வைத்து விடவும்.

    பல வண்ணங்களில் சுவரை அலங்கரிக்கலாம்

    card 5

    போர்வை கோட்டையை உருவாக்குங்கள்

    உங்கள் சொந்த வசதியான இடத்தில் புத்தாண்டை வரவேற்பது போல எதுவும் இல்லை.

    புத்தாண்டு ஈவ் நிகழ்ச்சி நிரலாக, நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் படங்களை பார்க்கலாம்.

    தலையணைகள், நியூஸ் பேப்பர்கள், போர்வைகள் மற்றும் மெத்தைகள் போன்றவற்றை சேகரித்து, அதன் மூலம் முழு வசதியான டென்ட்-ஐ உங்கள் அறைக்குள் செட் செய்யுங்கள்.

    உங்களுக்குப் பிடித்தமான பீட்சாவை ஆர்டர் செய்து, உங்களுக்கு விருப்பமான திரைப்படத்தை பார்த்துக்கொண்டு, ரிலாக்ஸ்டாக வீட்டிலேயே புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுபவிக்கவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புத்தாண்டு
    புத்தாண்டு
    புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    புத்தாண்டு 2024

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    புத்தாண்டு

    2023 புத்தாண்டு வாழ்த்துகள்: உங்கள் தீர்மானங்களை (resolution) கடைபிடிப்பதற்கான சில டிப்ஸ்கள் புத்தாண்டு
    2023 புத்தாண்டு ஹோட்டல் முன்பதிவுகளில், கோவாவை முந்தியது வாரணாசி புத்தாண்டு
    தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும்  தமிழக அரசு
    தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் டெல்லி

    புத்தாண்டு

    'தமிழ் நமது பெருமை' - ஈஷா நிறுவனர் சத்குரு புத்தாண்டு வாழ்த்து  புத்தாண்டு
    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  தமிழ்நாடு
    திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு  திருநெல்வேலி
    ஜனவரி 18 வரை, மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  மும்பை

    புத்தாண்டு கொண்டாட்டங்கள்

    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? சென்னை
    கூட்ட நெரிசலை தவிர்த்து, நியூ இயர் லாங் வீக்கெண்ட்-ஐ கொண்டாட, சில ரம்மியமான சுற்றுலா தலங்கள் உங்களுக்காக! சுற்றுலா

    புத்தாண்டு 2024

    புத்தாண்டை முன்னிட்டு ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சலுகையை அறிவித்தது ஜியோ ஜியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025