LOADING...
அடுப்பு வேண்டாம்..முட்டை வேண்டாம்! - இணையத்தை கலக்கும் ஜப்பானிய சீஸ்கேக் செய்வது எப்படி?
ஜப்பானிய சீஸ்கேக் உலகளவில் வைரலாகியுள்ளது

அடுப்பு வேண்டாம்..முட்டை வேண்டாம்! - இணையத்தை கலக்கும் ஜப்பானிய சீஸ்கேக் செய்வது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 27, 2026
12:37 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய வேகமான உலகில், குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான அல்லது சுவையான உணவுகளை தயாரிக்கவே பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில், வெறும் 'கிரீக் யோகர்ட்' (Greek Yogurt) மற்றும் 'பிஸ்கட்' ஆகிய இரண்டை மட்டுமே வைத்து செய்யப்படும் ஜப்பானிய சீஸ்கேக் உலகளவில் வைரலாகியுள்ளது. இந்த சீஸ்கேக்கிற்கு மாவு, பேக்கிங் பவுடர் என நீண்ட பட்டியல் தேவையில்லை. 'பிஸ்கோஃப்' (Biscoff) போன்ற பிஸ்கட்டுகளை ஒரு ஜாடியில் உள்ள யோகர்ட்டில் அடுக்கி, அதன் மேல் சிறிது காபி டிகாஷனை தெளித்து, இரவு முழுவதும் பிரிட்ஜில் வைத்தால் போதும். காலையில் வாயில் கரைந்து போகும் மென்மையான சீஸ்கேக் தயார்!

வைரல்

இந்த கேக் மீது ஏன் இத்தனை மோகம்?

சமையல் தெரியாதவர்கள் கூட மிக எளிதாக செய்ய முடியும் என்பதே இதன் மிகப்பெரிய பலம். அதுமட்டுமின்றி, பாத்திரங்களை அதிகமாக அழுக்காக்கத் தேவையில்லை என்பதும், குறைந்த கலோரி கொண்ட ஒரு இனிப்பாக இருப்பதும் நவீன தலைமுறையினரை அதிகம் கவர்ந்துள்ளது. பாரம்பரிய சீஸ்கேக்குகளில் இருக்கும் அதிகப்படியான இனிப்பு அல்லது எலுமிச்சை மணம் இதில் இருக்காது. இதன் சுவை நீங்கள் பயன்படுத்தும் தயிர் மற்றும் பிஸ்கட்டின் தரத்தை பொறுத்தே அமையும். சர்க்கரை சேர்க்கப்படாததால் இது சற்றே புளிப்பாக தெரியலாம் என்பதால், சிலர் சுவைக்காக வாசனை சேர்க்கப்பட்ட யோகர்ட்டுகளை பயன்படுத்துகின்றனர். குறைந்த உழைப்பில் ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியை விரும்பும் நபர்களுக்கு இந்த ஜப்பானிய சீஸ்கேக் ஒரு சிறந்த தேர்வாகும்.

Advertisement