
பளபளக்கும் கூந்தலுக்கு, கோகோ கோலாவை உபயோகிக்கவும்! இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் அதிர்ச்சி தகவல்
செய்தி முன்னோட்டம்
சமூக ஊடகங்களின் வருகையானது, நல்ல விஷயங்களை, பலருடன் பகிர்ந்துகொள்ள உபயோகமாக இருந்தாலும், சில நேரங்களில், மக்கள் அந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆராயாமல், கண்மூடித்தனமாக பின்பற்றும் அபாயமும் உள்ளது.
இதில் பிரபலங்களும் விதிவிலக்கல்ல. அப்படி சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஹேக்குகளில், பல அறிவியல் ரீதியாக சாத்தியமானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், உண்மை தன்மையை கண்டறியும் மனப்பாங்கு, பலருக்கு இல்லை என்பதே நிதர்சனம்.
சமீபத்தில், இணையத்தில் ஒரு விசித்திர செய்தி ட்ரெண்ட் ஆகி உள்ளது.
ஆலிஸ் சுகி வாட்டர்ஹவுஸ், என்று அழைக்கப்படும் இங்கிலீஷ் மாடல் தான், இந்த விசித்திரமான ஹேர் வாஷிங், டிரெண்டைத் தொடங்கினார். அதாவது, அவர் தலைக்கு குளிக்கும்போது, ஷாம்பூவிற்கு பதிலாக கோகோ கோலாவை உபயோகித்தாராம். அதனால் தனக்கு ஏற்பட்ட நன்மைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
ட்ரெண்டிங்
இந்த ட்ரெண்டை கண்மூடி தனமாக பாலோவ் செய்யும் பயனர்கள்
அந்த பெண்மணி, கோகோ கோலாவால் தனது கூந்தல் பளப்பாக, பட்டுபோல ஆகிவிட்டது எனக்கூறினாலும் கூறினார், இணையத்தில் பலரும் அதை பின்பற்ற துவங்கியுள்ளனர்.
அந்த இணையவாசிகள் கூறுபடி, மிகக் குறைந்த pH அளவைக் கொண்ட பாஸ்போரிக் அமிலம், கோகோ கோலா போன்ற குளிர் பானங்களில் உள்ளது எனவும், முடி இழைகளின் வேர்களை இறுக்கி, மிருதுவாகவும், பளபளப்பாகவும், அலை அலையான தோற்றத்தையும், பாஸ்போரிக் அமிலம் தருகிறது என நம்புகிறார்கள்.
இன்னும் சிலரோ, முதலில் முடியை தண்ணீரில் கழுவி, பின்னர் கோக் கொண்டு கழுவினால், முடி மேலும் துள்ளும் எனவும், அந்த பானத்தில் இருக்கும் சர்க்கரை, முடிக்கு அடர்த்தியை அளிக்கிறது எனவும் கூறிக்கொள்கிறார்கள்.
இந்த முன்னேற்றமடைந்த காலத்திலும், இப்படியும் சில மூடர்கள் எனவும் சிலர் கருத்துக்களை பரிமாறியுள்ளனர்.