NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தலைவலியை போக்க இந்த ஆயுர்வேத எண்ணெய்களை பயன்படுத்துங்கள்!
    தலைவலியை போக்க இந்த ஆயுர்வேத எண்ணெய்களை பயன்படுத்துங்கள்!
    1/2
    வாழ்க்கை 1 நிமிட வாசிப்பு

    தலைவலியை போக்க இந்த ஆயுர்வேத எண்ணெய்களை பயன்படுத்துங்கள்!

    எழுதியவர் Arul Jothe
    May 20, 2023
    10:32 am
    தலைவலியை போக்க இந்த ஆயுர்வேத எண்ணெய்களை பயன்படுத்துங்கள்!
    தலைவலிக்கு எந்த அத்தியாவசிய எண்ணெய்கள் நல்லது என்பதை அறிக

    ஆயுர்வேதம், பல ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மருத்துவமுறை. அதில் ஒருவகையான அரோமாதெரபியில், மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவார்கள். ஸ்ட்ரெஸ் மற்றும் வாழ்க்கைமுறைகளால் பலருக்கும் தலைவலி, உடல் சோர்வு போன்ற அசௌகரியங்கள் அவ்வப்போது ஏற்படுகிறது. இந்த தலைவலியை சமாளிக்க Essential Oils என்று அழைக்கப்படும், அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தலாம். இவ்வகை மூலிகை எண்ணெய்கள், நறுமணம் செறிவூட்டப்பட்ட, மூலிகை எண்ணெய்கள் ஆகும். உங்கள் தலைவலிக்கு மருந்தாக பயன்படுத்தக்கூடிய சில ஆயுர்வேத எண்ணெய் வகைகளை பற்றி பார்க்கலாம். லாவெண்டர் எண்ணெய்: தூக்கத்தை மேம்படுத்தவும், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணையை பயன்படுத்துவதால், மன அழுத்தத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

    2/2

    தலைவலியை குறைக்க எண்ணெய் மசாஜ்

    யூகலிப்டஸ் எண்ணெய்: இதை அன்றாட வாழ்க்கையிலேயே பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனையால் ஏற்படும் தலைவலியை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. ரோஸ்மேரி எண்ணெய்: இது அருமையான வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட எண்ணெய் ஆகும். மன அழுத்தத்தைக் குறைக்கவும், வலியைக் குறைக்கவும் பாரம்பரிய மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. பெப்பர் மின்ட் எண்ணெய்: மெந்தால் (menthol), தசைகளை தளர்த்தவும், வலியைக் குறைக்கவும் உதவும். டென்ஷனால் ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியால் உண்டாகும் அசௌகரியத்தை குறைக்கும். கெமோமில் எண்ணெய்: உடலைத் ரிலாக்ஸ் செய்து, தசை பிடிப்புகளை நீக்குகிறது. இது டென்ஷன் தலைவலிக்கு சிறந்த சிகிச்சையாக அமைகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உடல் நலம்
    உடல் ஆரோக்கியம்

    உடல் நலம்

    உடல் எடை குறைய மோனோ டயட்! கேள்விப்பட்டதுண்டா? உடல் பருமன்
    செயற்கை இனிப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் பக்க விளைவுகள்!  உடல் ஆரோக்கியம்
    சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்: உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் ஆரோக்கியம்
    இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனத்தெரியுமா? ஆரோக்கியம்

    உடல் ஆரோக்கியம்

    உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!  ஆரோக்கியமான உணவுகள்
    மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள் உடற்பயிற்சி
    சர்வேதேச செவிலியர்கள் தினம்: இரவுபகலாக உழைக்கும் செவிலியர்களுக்கு உடல் சோர்வை நீக்க சில குறிப்புகள் உலகம்
    இரவு தூக்கம் கெட்டுப்போனால், மதியம் தூங்கும் பழக்கம் உண்டா? தூக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023