Page Loader
அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் இடம்பெறவுள்ள தனித்துவமான விஷயங்கள்
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் திருமணம் நடைபெறவுள்ளது

அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் இடம்பெறவுள்ள தனித்துவமான விஷயங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2024
05:10 pm

செய்தி முன்னோட்டம்

உலக பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானியின் வீட்டில் இன்னும் சில நாட்களில் திருமண வைபவம் நடைபெறவுள்ளது. முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் திருமணம் நடைபெறவுள்ளது. ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல தொழில்களுக்கு, வென்ச்சர்ஸ் இயக்குநராக பணியாற்றுகிறார். உலகிலுள்ள பல பிரபலங்களுக்கு இந்த திருமணத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் தங்களது திருமணத்திற்கு முந்தைய விழாக்களை, மார்ச் 1-3 தேதிகளில் குஜராத்தின் ஜாம்நகரில் நடத்த உள்ளனர். இந்த கொண்டாடத்திற்கும் பல பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். உலகளாவிய பாப்-ஸ்டார் ரிஹானா முதல் தில்ஜித் டோசன்ஜின் நிகழ்ச்சிகள் வரை, கலைநிகழ்ச்சிகள் சர்வதேச கண்காட்சிக்கு குறையாததாக இருக்கும்.

அம்பானி வீட்டு திருமணம்

ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண கொண்டாட்டங்களைப் பற்றிய தனித்துவமான விஷயங்கள்

இடம்: ஜாம்நகர், திருமண கொண்டாட்டங்களுக்கு சிறந்த தேர்வாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற பிரபலங்களை போல ஆடம்பரமான சுற்றுலாத்தலங்களை தேர்வு செய்யாமல், தங்கள் சொந்த ஊரில், சொந்த வீட்டில் வைக்க தீர்மானித்திருப்பது தனித்துவமான முடிவு. 3 நாள் கொண்டாட்டம்: ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண கொண்டாட்டம் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளால் நிரம்பி இருக்கும். இதில் பாடுவதற்கும், பெர்ஃபார்ம் செய்யவும் உள்ளூர் கலைஞர்களை தேர்வு செய்துள்ளனர். ஜாம்நகரில் ரிஹானா: உலகளாவிய பாப் ஐகானான ரிஹானா திருமணத்திற்கு முந்தைய காலா நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது ரிஹானாவின் முதல் இந்தியா வருகை. இயற்கை: ஜாம்நகரில் கடந்த சில தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட இயற்கைப் பாதுகாப்பின் அனுபவத்தையும் இந்த கொண்டாட்டங்கள் விருந்தினர்களுக்கு வழங்கும்.