LOADING...
மழைக்காலத்தில் செய்து சாப்பிட வேண்டிய பீட்ரூட்டில் செய்யப்படும் 5 உணவுகள்
பீட்ரூட் உடலுக்கு பலம் கொடுக்கும்

மழைக்காலத்தில் செய்து சாப்பிட வேண்டிய பீட்ரூட்டில் செய்யப்படும் 5 உணவுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 17, 2026
06:49 pm

செய்தி முன்னோட்டம்

பீட்ரூட் ஒரு காய். இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் ரொம்ப நல்லது. இதில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின்-C சத்துக்கள் நிறைய உண்டு. இது உடலுக்கு பலம் கொடுக்கும். மழைக்காலத்தில் பீட்ரூட்டில் செய்த உணவுகள் உங்களுக்கு ஒரு சூட்டைக் கொடுக்கும். அதுமட்டுமல்ல, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும். வாருங்கள் இன்று பீட்ரூட்டில் செய்யக்கூடிய உணவுகளின் செய்முறைகளை பார்ப்போம். இவற்றை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.

#1

பீட்ரூட் அல்வா

பீட்ரூட் அல்வா ஒரு வித்தியாசமான, ரொம்ப சுவையான இனிப்பு வகை. இதை நீங்கள் எந்த ஒரு விசேஷமான சந்தர்ப்பத்திலும் செய்யலாம். இதை செய்வதற்கு முன், முதலில் பீட்ரூட்டை துருவி கொள்ளுங்கள். பின்னர் அதை நெய்யில் வதக்கி, பால் ஊற்றி வேக வைக்கவும். பால் சுண்டி போனதும், சர்க்கரை, ஏலக்காய் தூள், உலர்ந்த பழங்கள் சேர்த்து கிளறுங்கள். இந்த அல்வா வெறும் சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. காரணம் இதில் நிறைந்துள்ள இரும்புச்சத்தும், நார்ச்சத்தும்!

#2

பீட்ரூட் பராத்தா

பீட்ரூட் பராத்தா காலை உணவுக்கோ அல்லது மாலை நேர சிற்றுண்டிக்கும் ஒரு சிறந்த தேர்வு. இதை செய்வதற்கு, கோதுமை மாவில் துருவிய பீட்ரூட், உப்பு, மிளகாய் தூள், ஓமம் சேர்த்து மாவை பிசைய வேண்டும். இப்போது அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல தேய்த்து, தோசைக்கல்லில் சுட்டு எடுக்க வேண்டியதுதான். நெய் தடவி பரிமாறுங்கள், சுவையும் சூப்பராக இருக்கும். இந்த பராத்தா வெறும் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. ஏனென்றால் இதில், வைட்டமின்-C யும், நார்ச்சத்தும் நிறைய உள்ளது.

Advertisement

#3

பீட்ரூட் ராய்தா

சில்லென்ற தயிர் பச்சடியை (ராய்தா) யாருக்குத்தான் பிடிக்காது? நீங்கள் ஏதாவது புதிதாக முயற்சிக்க நினைத்தால் பீட்ரூட் ராய்தாவை கண்டிப்பாக செய்து பாருங்கள். இதற்கு தயிரில் துருவிய பீட்ரூட், வறுத்த சீரகத்தூள், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நல்லா கலந்து விடுங்கள். உங்கள் சுவையான, ஆரோக்கியமான ராய்தா ரெடி. இந்த ராய்தா உங்கள் உணவை சமநிலைப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்க வயிற்றையும் குளிர்ச்சியாக்கும்.

Advertisement

#4

பீட்ரூட் சப்ஜி

பீட்ரூட் சப்ஜி ஒரு ஆரோக்கியமான தேர்வு. இதை நீங்கள் உங்கள் தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம். இதற்கு முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது போட்டு வதக்கிக்கொள்ளவும். பின்னர் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து வேக வைக்கவும். மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா மாதிரி மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக கிளறவும். கொஞ்ச நேரம் மூடி போட்டு வேக வைக்கவும். அப்போதுதான் மசாலா நன்றாக சேரும். இந்த சப்ஜி வெறும் சுவையானது மட்டுமல்ல, வைட்டமின்-C யும் நார்ச்சத்தும் நிறைந்தது.

#5

பீட்ரூட் சூப்

மழைக்காலத்தில் சூடான சுவையான ஒரு சூப் குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது? பீட்ரூட் சூப்பை கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள். இதற்கு முதலில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி இதை எண்ணெயில வதக்கி கொள்ளுங்கள். அதனுடன் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். வெந்ததும் இதை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன், உப்பு, மிளகு சேர்த்து மறுபடியும் சூடு செய்து கொள்ளவும். உங்களுக்கு ஆரோக்கியமான, சுவையான சூப் ரெடி!

Advertisement