
ரவா இட்லி உருவான உலகப்போர் கதை தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
இந்தியா மக்களின் பாரம்பரிய உணவாக கருதப்படும் இட்லியில் பல வகைகள் உண்டு என அறிந்திருப்பீர்கள்.
அதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் ரவா இட்லி. இந்த வகை இட்லி, கர்நாடகாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் மாவல்லி டிபன் சென்டர் என்று அழைக்கப்படும் MTR-இல் தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என கூறுகிறார்கள்.
இது குறித்து அந்நிறுவனத்தின் தற்போதைய MD விக்ரம் மையா, ஒரு தினசரிக்கு அளித்த பேட்டியில், இரண்டாம் உலக போரின் போது, இந்தியாவில் அரிசி தட்டுப்பாடு நிலவியது.
தென்னிந்தியர்கள் விரும்பி உண்ணும் இட்லிக்கு, முக்கிய பொருள் அரிசி தான். அதனால், இந்த நிலைமையை சமாளிக்க, விக்ரமின் மாமா தான், ரவையை கொண்டு, ரவா இட்லி செய்யும் முறையை கண்டுபிடித்ததாக அவர் கூறுகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
ரவா இட்லியின் வரலாறு
Do you know the Rava Idli origin story?
— Explocity (@explocityblr) December 7, 2018
#BangaloreTrivia, amazing #bangalore. Debate. #share. #follow #bengaluru #FlashbackFriday#DidYouKnow #Idli #RavaIdli #MTR #WorldWar2 #FunFact #FoodFood #Foodstagram #FoodFact #Explocity #Trivia #Bangalore #foodie #worldwar2 #wwii pic.twitter.com/WCBTNTb4GC