NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உலகின் சிறந்த ஆடம்பர ஃபேஷன் பிராண்டுகளை பற்றி தெரிந்து கொள்வோமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் சிறந்த ஆடம்பர ஃபேஷன் பிராண்டுகளை பற்றி தெரிந்து கொள்வோமா?
    உலகின் சிறந்த ஆடம்பர ஃபேஷன் பிராண்டுகளை பற்றி தெரிந்து கொள்வோமா?

    உலகின் சிறந்த ஆடம்பர ஃபேஷன் பிராண்டுகளை பற்றி தெரிந்து கொள்வோமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 04, 2024
    02:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ஃபேஷன், சிலருக்கு, வெறும் ஆடைகளைத் தாண்டி, அந்தஸ்து, தனித்தன்மை மற்றும் இணையற்ற கைவினைத்திறன் ஆகியவற்றின் சின்னமாக மாறுகிறது.

    சில நேரங்களில் பேஷன் துறையில் உச்சம் தொட்டவர்கள் பலரும் பலவகையான பிராண்டுகளை பயன்படுத்துவதுண்டு.

    அவர்கள் பயன்படுத்தும் பிராண்டுகளுக்கு ஏற்ப, அவர்களுடைய ஆடம்பரத்தை சின்னம் உயருவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

    அதனாலேயே பிரபலங்கள் பலரும் தங்கள் பெயர் சார்ந்த பேஷன் பிராண்டுகளை உருவாக்க முயல்கிறார்கள்.

    பிரியங்கா சோப்ரா, நயன்தாரா, ஹ்ரித்திக் ரோஷன் என நீங்கள் அறிந்த பிரபலங்கள் பலரும் இதில் அடக்கம்.

    ஒரு அவர்களுடைய பிராண்டும் காஸ்டலியெஸ்ட் பிராண்டாக மாற்றுவதே அவர்களின் கனவாகும்.

    இதற்கிடையே, உலகின் விலையுயர்ந்த ஆடை பிராண்டுகள் மற்றும் பிரத்தியேக ஃபேஷன் லேபிள்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    card 2

    பிராடா (Prada)

    1913 ஆம் ஆண்டில், பிராடா, மிலனில் தோல் பொருட்கள் கடையாகத் தொடங்கப்பட்டது.

    அதன் பின்னர், உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஆடம்பர லேபிள்களில் ஒன்றாக வளர்ந்தது.

    பிராடா, அதன் நேர்த்தியான கைவினைத்திறன், குறைந்தபட்ச ஸ்டைல் மற்றும் ஆக்கப்பூர்வமான வடிவமைப்புகளுக்கு புகழ்பெற்றது.

    அதன் சேகரிப்புகளில் தோல் பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் முதல் காலணிகள் வரை அனைத்தும் இடம்பெற்றுள்ளது.

    card 3

    சேனல் (Chanel)

    கபிரியேல் "கோகோ" சேனல், 1909 இல் அதை அறிமுகப்படுத்தியதிலிருந்து, அதன் நேர்த்தியான, நுட்பமான மற்றும் ஆடம்பரத்திற்காக அறியப்பட்ட மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பேஷன் பிராண்டுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

    சேனல் அதன் உன்னதமான வடிவமைப்புகளுக்கு புகழ்பெற்றது. அதில் "little black dress" என்று அழைக்கப்படும் குயில்ட் ஹான்ட் பேக் மற்றும் மிகவும் பிரபலமான எண். 5 சென்ட் ஆகியவை அடங்கும்.

    card 3

    டோல்ஸ் & கபனா (Dolce & Gabbana)

    1985 ஆம் ஆண்டில் டொமினிகோ டோல்ஸ் மற்றும் ஸ்டெபனோ கபனா ஆகியோரால் நிறுவப்பட்டது.

    இந்த இத்தாலிய பிராண்ட், சிறந்த கைவினைத்திறனை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பரமான ஆடைகளை வடிவமைப்பதில் பல தசாப்த கால அனுபவத்தைப் பெற்றுள்ளது.

    டோல்ஸ் மற்றும் கபனா, நகைகள், வாசனை திரவியங்கள் மற்றும் கைப்பைகள் உட்பட பல்வேறு ஆடம்பர ஆடைகளையும் விற்பனை செய்கிறது.

    card 4

    வெர்சேஸ் (Versace)

    1978 இல் நிறுவப்பட்டதிலிருந்து வெர்சேஸ், உலகின் மிக விலையுயர்ந்த ஆடை பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

    தடிமனான பிரிண்ட்கள், எடுப்பான வண்ணங்கள் மற்றும் ஆடம்பரமான வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்ற வெர்சேஸின் ஒப்பிடமுடியாத பேஷன் பொருட்கள், பல ஆண்டுகளாக பல சர்வதேச மாடல்களால் விரும்பப்படுகின்றன.

    அதிலும் மறைந்த இளவரசி டியானாவின் மிகவும் விரும்பட்ட பேஷன் பிராண்ட் இது என கூறப்படுகிறது.

    card 5

    குஸ்ஸி (Gucci)

    இத்தாலிய பிராண்ட் குஸ்ஸி, 1921 இல் அதன் முதல் கடையை தொடங்கி, தனது பேஷன் வணிகத்தைத் தொடங்கியது.

    கைப்பைகள், அணிகலன்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு குஸ்ஸி அறியப்படுகிறது.

    ஆனால் அதன் தனித்துவமான மற்றும் நாகரீகமான டிசைனர் ஆடைகள் அதை தனித்துவமாக்குகிறது.

    2006 ஆம் ஆண்டு ஏலத்தில் $256,970 (ரூ. 2.14 கோடி)க்கு விற்கப்பட்ட பிளாட்டினம்-பக்கிள் செய்யப்பட்ட, வைரம் பதிக்கப்பட்ட பெல்ட்தான் தற்போது வரை மிகவும் விலையுயர்ந்த குஸ்ஸி பொருள் என கூறப்படுகிறது.

    card 6

    ஹெர்ம்ஸ் (Hermes)

    பிரான்சில் பிறந்த பிராண்ட் ஹெர்ம்ஸ், 1837 இல் அதன் உருவாக்கியவரான தியரி ஹெர்ம்ஸால் நிறுவப்பட்டது.

    உலகளாவிய சந்தையில் பேஷன் உலகின் நன்கு அறியப்பட்ட இந்த பிராண்டின் தலைமையகம், பாரிஸில் உள்ளது.

    ஹெர்ம்ஸ் என்ற பிராண்ட் பெயர், பல ராயல்டிகள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளுக்கான நன்கு அறியப்பட்ட நபர்களுடன் தொடர்புடையது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பேஷன்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    பேஷன்

    பேஷன்: தென்னிந்தியாவில் பிரபலமான எம்பிராய்டரி டிசைன்கள் பற்றி சிறு குறிப்பு  எம்பிராய்டரி
    ஃபேஷன் என்ற பெயரில் பிரபல நிறுவனம் விளம்பரப்படுத்திய டவல் ஸ்கர்ட் இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025