அடுத்த தலைமுறையினருக்காக, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்!
பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்கள் பயன்பட்டால் சுற்றுசூழல் தீவிரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அன்றாடம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் பலவும் பிளாஸ்டிக்கால் ஆனது தான். நாம் வாழும் காலம் மட்டுமன்றி, அடுத்தடுத்த தலைமுறையினர் வாழ்வதற்கு ஏற்ற ஆரோக்கியமான சுற்றுப்புறத்தை உருவாக்குவது அனைவரின் பொறுப்பு. எல்லா மாற்றங்களும் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். அந்த அடிப்படையில், வீட்டில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டை எப்படி குறைப்பது என்பதற்கான டிப்ஸ் இங்கே. 1. பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக துணிப்பை அல்லது காகிதப்பை: சில ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக புழக்கத்தில் இருந்த மஞ்சள் பையை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கினாலே, வீட்டில் பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாடு பெரிய அளவில் குறையும்.
வீட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று வழிகள்
2. உணவுப் பொருட்களை மளிகை சாமான்களை மொத்தமாக வாங்குங்கள்: பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், போன்றவை வீட்டில் சேருவதைத் தவிர்க்க, முடிந்த அளவில் உணவுப் பொருட்கள், மளிகை சாமான்களை மொத்தமாக வாங்கலாம். 3. காஸ்மெட்டிக்ஸ்ஸில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்: பிளாஸ்டிக் பொருட்கள் என்றால், கவர், நாற்காலி, பாட்டில், போன்றவை மட்டுமல்ல. பலரும் பயன்படுத்தும் காஸ்மெடிக்ஸ்ஸில் இருக்கும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் சுற்றுப்புறத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக இயற்கையான மற்றும் நீடித்து உழைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம். 4. டிஸ்போசபில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்: பேனா முதல் காஃபி/ஜூஸ் கப் வரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். மாற்றாக, மூங்கில், மரம், எவர்சில்வர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.