அக்ஷய திரிதியைக்கு நீங்கள் தங்கம் தவிர வேறு சில பொருட்களையும் வாங்கலாம்!
இந்தியா முழுவதும் இன்று, ஏப்ரல் 22 அன்று, அக்ஷய திரிதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தொடங்கும் எந்த ஒரு விஷயமும், வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நாளை, அதிர்ஷ்டம், வெற்றி தரும் நாளாக பார்க்கிறார்கள். மேலும் இந்த புனித நாளில், தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. ஆனால், தங்கம் மட்டும் தான் வாங்கவேண்டும் என்பதில்லை. வாழ்க்கையில் ஐஸ்வர்யம் பெறுக, தங்கம் தவிர, வேறு சில பொருட்களையும், அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக்கொள்ளலாம் என கூறுகிறார்கள் வேத பண்டிதர்கள். வெள்ளி: தங்கத்தை போன்றே, இதுவும் செல்வதை அருளும் ஒரு பொருளாகும். இறைவனை பூஜிக்க வெள்ளி பொருட்களை பயன்படுத்துவதுண்டு. இந்நாளில், வெள்ளி பொருட்களை வாங்கி, பிரியமானவர்களுக்கும் பரிசளிக்கலாம்.
முதலீடுகளை தொடங்க நல்ல நாள்
வீட்டு மனை: இந்த நாள், அதிர்ஷ்டம் தரும் நாளாக பார்க்கப்படுவதால், இன்னாளில், புது வீடு வாங்குவது, மனைகளை ரெஜிஸ்ட்ரேஷன் செய்வது என முக்கிய முடிவுகள் எடுக்கலாம் ஷேர்ஸ்: இந்த நாளில், ஷேர்மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஸ்டாக் மார்க்கெட் போன்றவைகளில் முதலீடு செய்யலாம். வாகனம்: நீங்கள் புதிதாக வாகனம் வாங்க வேண்டுமென நீண்ட நாளாக யோசித்து வந்தால், இந்த நாளில் வாங்குவது நல்லது விவசாய உபகரணங்கள்: இயற்கை தாய்க்கு காணிக்கையாக, இந்த நாளில் விவசாயம் சம்மந்தப்பட்ட உபகரணங்கள் வாங்கலாம். புத்தகம்: மாணவர்கள், தங்கள் மேற்படிப்பிற்காக, இந்த நாளை தேர்ந்தெடுத்து புத்தகங்கள் வாங்குவதும் நல்லது எனக்கூறுகிறார்கள். படிப்பு சம்மந்தமாக எந்த ஒரு முக்கிய முடிவும் இன்று எடுத்தால், அது நிச்சயம் வெற்றி பெறும் எனக்கூறுகிறார்கள்.