ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
அழகு குறிப்புகள்: அழகாக தோலை பராமரிக்க உதவும் ஐஸ்கட்டிகள், முகத்திற்கு பொலிவு தரும் மிக எளிதான ஒரு வீட்டு வைத்தியம் ஆகும். ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்தால் அது வீங்கிய கண்கள் மற்றும் முகப்பருக்களை விரைவில் நீக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். சருமத்தில் செய்யப்படும் ஐஸ் ஃபேஷியல், பொதுவாக கிரையோதெரபி என்று குறிப்பிடப்படுகிறது. ஐஸ்கட்டிகளை நேராக முகத்தில் தேய்ப்பதுவே ஐஸ் ஃபேஷியல்என்று அழைக்கப்படுகிறது. மென்மையான துணியில் மூடப்பட்ட ஐஸ்கட்டிகளையும் வைத்தும் சிலர் இந்த ஃபேஷியலை செய்கிறார்கள். கண்களுக்குக் கீழே உள்ள பகுதியில் ஐஸ்கட்டிகளைப் பயன்படுத்துவது இரத்த நாளங்களைச் சுருக்கி, வீக்கத்தைக் குறைக்க உதவும்.
ஐஸ் ஃபேஷியல் சிகிச்சைகளின் நன்மைகள்
குறிப்பாக காலை எழுந்தவுடன் ஐஸ் ஃபேஷியல் செய்வது மிகவும் நல்லது. இது சோர்வடைந்த கண்களை எழுப்பவும் புத்துயிர் பெறவும் உதவுகிறது. பெரும்பாலும் வீக்கத்திலிருந்தே முகப்பருக்கள் உருவாகின்றன. எனவே, ஐஸ்கட்டிகயின் குளிர்ச்சியான தன்மை இதை கணிசமாகக் குறைத்து, சிவத்தல் மற்றும் வெடிப்புகளையும் குறைத்து வீக்கமடைந்த பகுதிகளை ஆற்ற உதவுகிறது. கூடுதலாக, ஐஸ் ஃபேஷியல் சிகிச்சைகள் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சீராக்க உதவுகின்றன. எனவே, இது தோலில் இருக்கும் துளைகளை சிறிதாக்கி தோல் அமைப்பை மேம்படுத்துவதோடு முகப்பரு பிரச்சினைகளை உண்டாக்கும் அசுத்தங்கள் நுழைவதைத் தடுக்கிறது.