கோடை விடுமுறையிலும் குழந்தைகளை கோடை வகுப்புகளுக்கு அனுப்புவதா? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
கோடை விடுமுறையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பிஸியாக வைக்க விரும்புகிறார்கள். ஏனெனில் குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது, ஆன்லைன் கேம்கள் விளையாடுவது, தூங்குவது மற்றும் சாப்பிடுவது என நேரத்தை வீணடிக்க கூடாது என நினைக்கிறார்கள். அதனால் கோடைக்காலத்தில் கூடுதல் வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். மேலும் கோடைக்காலத்தில் குழந்தைகள் நீச்சல், ட்ரெக்கிங், அல்லது குழு விளையாட்டுகளை விளையாடுவது போன்றவற்றில் கலந்து கொள்கிறார்கள். படித்தல், எழுதுதல் & கணிதம் ஆகியவற்றிற்கும் ஒரு பிரத்யேக நேரம் ஒதுக்குகிறார்கள். குழந்தையின் முழுமையான மன ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக, உடல் திறன்கள், மன திறன்கள் & ஆளுமை மேம்பாடு ஆகிய மூன்று முக்கிய செயல்பாடுகளை கண்டறிந்து தொடர வேண்டும். வல்லுநர்கள் கோடைகாலப் வகுப்புகளில் நன்மைகள் & குறைபாடுகள் உள்ளன என்கிறார்கள்.
சில குழந்தைகளுக்கு கூடுதல் வகுப்புகள் ஏன் நல்ல யோசனையாக இருக்காது?
பெற்றோராக நீங்கள் இருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் உள்ளன. இது தீவிர சோர்வு & பலவீனத்தை ஏற்படுத்தும். குழந்தையின் வயது & ஆளுமையைப் பொறுத்து வகுப்புகளில் சேர்த்து விடுமுறையை உகந்ததாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விடுமுறையில் கல்வி மேம்பாட்டு வகுப்புகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது மனச் சோர்வை ஏற்படுத்தும். கடுமையான சோர்வு, மறதி, கவனம் செலுத்துவதில் சிக்கல், தலைவலி போன்றவை ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு படிப்பது எப்போதும் நல்ல யோசனையல்ல. உங்கள் பிள்ளைக்கு படிப்பில் அழுத்தம் இருந்தால், நீங்கள் அவர்களை வேடிக்கையான பயிற்சிகளில் ஈடுபடுத்தலாம். இது அவர்களை புதுப்பிக்கும். கணிதம் போன்ற சில பாடங்களில் குழந்தை பின்தங்கியிருந்தால் கூடுதல் வகுப்புகளில் சேர்க்கலாம். இது அதிக நம்பிக்கையுடன் அடுத்த வகுப்பிற்குள் நுழைய மட்டுமே உதவுகிறது.