நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கான அத்தியாவசிய குறிப்புகள்
மழைக்காலத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதும் நோய்கள் பரவுவதும் மிக சாதாரணமான விஷயமாகும். இது போன்ற நோய்களை எதிர்த்து போராட நம் உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நாம் செய்ய வேண்டியவைகளை இப்போது பார்க்கலாம். சீரான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணுதல் மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சத்தான உணவை உண்ண வேண்டும். உணவில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் ஆகியவற்றைச் சேர்ப்பது நல்லது ஆரஞ்சு, கொய்யா, கிவி, பப்பாளி, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
சுத்தமும் சுகாதாரமும் அவசியம்
மழைக்காலத்தில், நோய்கள் பரவாமல் இருக்க தனிப்பட்ட சுகாதாரம் மிகவும் அவசியம். முக்கியமாக, நோய் கிருமிகள் பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். போதுமான தூக்கம் தினமும் 7-8 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும். குறைவான தூக்கம் அல்லது தூக்கமின்மை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைக் குறைக்கிறது. இது, நோய்க்கிருமிகள் சுலபமாக உடலில் பரவ வழி வகுக்கிறது. உடற்பயிற்சி தினமும் உடற்பயிற்சி செய்வதால் நோயெதிர்ப்பு சக்தியை வேகமாக வலுப்படுத்தலாம். மழைக்காலத்திலும், ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகித்தல் நாள்பட்ட மன அழுத்தம் நோயெதிர்ப்பு செயல்பாட்டைத் தடுக்கிறது. அதனால், தியானம், சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.