அன்னையர் தினம்: அம்மாவுக்கு பரிசளிக்கக்கூடிய சில பயனுள்ள பொருட்கள்!
செய்தி முன்னோட்டம்
வரும் மே 14 அன்று, அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால், அம்மாவிற்கு இரட்டை கொண்டாட்டம் தான். தன்னுடைய சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ள, வீட்டிலேயே ஒரு தோழி, வயதான பிறகு அரணாக ஒரு துணை என தைரியமாக உணருவார்கள்.
அதேபோல, தற்போதுள்ள பெண் பிள்ளைகளுக்கும், அம்மா தன்னுடைய முதல் தோழி என கூறும் அளவிற்கு காலம் மாறிவிட்டது.
அந்த அம்மாவிற்கு பரிசாக என்ன தரலாம் என யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம், அவர்களுக்கு உபயோகமாகவும், அவரை அசத்தும் வகையிலும், சில பரிசு பொருட்களின் பட்டியல், இதோ உங்களுக்காக:
மாக்ஸி டிரஸ்: மாடர்னாகவும், அதே நேரத்தில் அணிவதற்கு சௌகரியமாகவும் இருக்கும் இந்த வகை டிரஸ், பல பிராண்டுகளில் கிடைக்கின்றது.
card 2
அம்மாவிற்கு உபயோகமான பரிசுகள்
வாக்கிங் ஷூஸ்: தினமும் நடைப்பயிற்சி செய்ய, காலுக்கு இதமான, லைட் வெயிட் ஷூக்களை பரிசளிக்கலாம்
வாக்குவம் கிளீனர்: அம்மாவின் வீட்டுவேலை சுமையை குறைக்க, ஒரு வாக்குவம் கிளீனர் பரிசளிக்கலாம். தற்போது வயர்லெஸ் வாக்குவம் கிளீனர் கூட சந்தையில் கிடைக்கிறது.
டிஜிட்டல் போட்டோ பிரேம்: உங்கள் அம்மாவின் அழகிய நினைவுகளை எல்லாம் டிஜிட்டல் ஆக்கி, இதில் பதிவேற்றிவிடுங்கள். அவர் அதை பார்த்து நிச்சயம் மகிழ்வார்.
மசாஜர்: கழுத்து, முதுகு போன்றவற்றை மசாஜ் செய்யும் மாசாஜர்கள் சந்தையில் கிடைக்கிறது. கால்களுக்கும் தனியாக மசாஜர் உண்டு.
ஆண்டி க்ளாரிங் கிளாஸ்: தற்போது சந்தையில் கிடைக்கும் இந்த ப்ளூ லைட் பிளாக்கிங் கண்ணாடிகள், டிவி, மொபைலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளில் இருந்து, அம்மாவின் கண்களை பாதுகாக்க உதவும்.