உங்கள் மனநிலையை மீட்டெடுக்கும் பண்புகளை வழங்கும் இந்தியா மசாலாக்கள்
இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் உங்கள் உணவை மிகவும் நறுமணத்துடனும், சுவையுடன் மாற்றுவது மட்டுமல்லாமல், உங்கள் மனநிலையை சமநிலையில் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக மனஅழுத்தம் இருக்கும்போது. நமது சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல மசாலாப் பொருட்கள், உங்கள் உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்து, மனநிறைவை அனுபவிக்க உதவும். உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில மசாலாப் பொருட்கள் இதோ:
குங்குமப்பூ
பல்வேறு ஆய்வுகளின்படி, உடல் வெப்பமயமாதல் மற்றும் உணர்வுகளை தூண்டுதலுக்கான மசாலா, குங்குமப்பூ. அது ஒருவரின் மனநிலையை மேம்படுத்துகிறது. இந்த மசாலா பொருளின் இனிமையான நறுமணம் ஆண்டிடிரஸன்ஸைப் போலவே, அதே விளைவை அளிக்கிறது. இது உங்களின் கவலை அல்லது மனச்சோர்வின் உணர்வுகளை அகற்ற உதவுகிறது. சில ஆய்வுகள் குங்குமப்பூ சப்ளிமெண்ட்ஸ், பல மனநலப் பிரச்சினைகளின் அறிகுறிகளைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கின்றன.
இலவங்கப்பட்டை
மற்றொரு அற்புதமான மனநிலையை சமநிலையில் வைத்திருக்கும் மசாலா இலவங்கப்பட்டை. ஆயுர்வேதத்தின் படி, இது வாதம் மற்றும் கபத்தை சமப்படுத்துகிறது. மேலும் இது உங்கள் உணர்ச்சிகளை சமப்படுத்தவும், உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், உங்கள் செறிவை அதிகரிக்கவும் உதவுகிறது. இலவங்கப்பட்டை அடாப்டோஜெனிக் என்பதால், இது உங்கள் மன அழுத்த ஹார்மோன்களைச் சமன் செய்து, மனச் சோர்வைக் குறைக்கும் ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கும் என நம்பப்படும் சின்னமால்டிஹைட் என்ற கலவையை இந்த மசாலா பொருளில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இஞ்சி
பட்டியலில் அடுத்ததாக இஞ்சி உள்ளது. இது உங்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும். அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் உங்கள் மனநிலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வுகளின்படி, இந்த மசாலா, ஆண்டிடிரஸன் பண்புகளைக் கொண்டுள்ளது. அவை மூளையில் உள்ள செரோடோனின் ஏற்பிகளுடன் நேரடி தொடர்பு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். தினசரி நுகர்வுக்கு, உங்கள் உணவுகள் மற்றும் தேநீர் போன்ற பானங்களில் இந்த இஞ்சியைச் சேர்க்கலாம்.
மஞ்சள்
மஞ்சள் ஒருவரின் மனநிலையை எவ்வாறு சாதகமாக மாற்றுகிறது என்பதை பல ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த மஞ்சள், அழற்சி எதிர்ப்பு பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. இது உடலில் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கிறது. இந்த நிவாரணத்தின் மூலம், ஒருவர் அமைதியாக உணர முடியும். அது மட்டுமின்றி, மஞ்சள் "மகிழ்ச்சியான ஹார்மோன்" டோபமைனின் வெளியீட்டை அதிகரிப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.