ஹோட்டலில் உண்ணும்போது ஸ்பூன் மற்றும் ஃபோர்க் பயன்படுத்தும் ஆசாமியா? அப்போது நீங்கள் இதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்
பெரிய ஹோட்டல்களில் உணவருந்த செல்லும் போது, சாப்பிடுவதற்கு, ஸ்பூன் மற்றும் ஃபோர்க் பயன்படுத்துவார்கள். பல மேலை நாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது. கட்லரி (cutlery) என்றழைக்கப்படும் இந்த ஸ்பூன், கத்தி, ஃபோர்க் பயன்படுத்துவதற்கும் சில நெறிமுறைகள் உண்டு. மேசை நாகரீகம் (Table Manners) என்பதன் கீழ், இந்த பயன்பாட்டு விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வலக்கையில் கத்தி அல்லது ஃபோர்க் உதவியுடன், இடக்கையில் ஸ்பூன் கொண்டு உண்ண வேண்டும் என்பது விதி. சரி, உண்டபின் அவற்றை தட்டில் எப்படி வைக்க வேண்டும் என தெரியுமா? நீங்கள் அதனை வைக்கும் முறையில், உணவு பரிமாறுபவர்களுக்கு குறிப்பால் எதையோ உணர்த்துகிறீர்கள் என்று கட்லரி சாஸ்திரம் கூறுகிறது
ஸ்பூன், ஃபோர்க் மற்றும் கத்தி!
சாப்பிட தயார் அல்லது இன்னும் முடிக்கவில்லை: இடதுபுறத்தில் முட்கரண்டி மற்றும் வலதுபுறத்தில் கத்தி அல்லது ஸ்பூன். இரண்டும் ஒரு சுத்தமான தட்டுக்கு வெளியே, வைக்கப்பட்டிருந்தால், நீங்கள் உண்ண தொடங்கப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. இதுவே, ஒரு மலையின் வடிவத்தில், முட்கரண்டி இடதுபுறத்தில் இருந்து உள்நோக்கி சாய்ந்து, கத்தி வலதுபுறத்தில் உள்நோக்கி சாய்ந்து வைத்தால், நீங்கள் சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளீர்கள், மீண்டும் தொடர்வீர்கள் என்று அர்த்தம். சாப்பாடு பிரமாதம்: உங்கள் தட்டின் நடுவில் முட்கரண்டி மற்றும் கத்தியை கிடைமட்டமாக வைக்க வேண்டும். முடிந்தது: முட்கரண்டியை தலைகீழாக, தட்டில் சாய்த்து வைக்கவும். அதற்கு இணையாக கத்தியையும், ஸ்பூனையும் ஒரு சேர வைத்தால், இந்த உணவு பிடித்திருந்தது என்றும், நீங்கள் உண்டு முடித்து வீட்டீர்கள் என்றும் அர்த்தம்.