குளிர்காலத்தில் சரும வறட்சி, கருமையை தவிர்ப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்
தமிழ்நாட்டில் விரைவில் குளிர்காலம் துவங்கவுள்ளது. இதனால் நமது சருமத்தில் பல பிரச்சனைகள் தோன்றுவது பொதுவான விஷயம். குளிர் காற்றினால் சருமத்தின் துளைகள் அடைபட்டு, இறந்த செல்கள் உள்ளேயே தங்கும்படி செய்துவிடும். இதனால் சருமம் வறட்சி, அரிப்பு மற்றும் கருமை உள்ளிட்ட சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனைத்தவிர்க்க சரும பராமரிப்பு குறிப்புகள் சிலவற்றை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம்.
வறண்ட சரும்மத்திற்கு ஆரோக்கியமான உணவும், தேவையான தண்ணீர் பருகுவதும் அவசியம்
ஆரோக்கிய உணவு: குளிர்காலத்தில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது சருமத்தை பளபளப்பாக வைத்து, வறட்சி, பளபளப்பின்மை ஆகியவற்றைக் குறைக்கும். அதோடு குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்வதை உறுதி செய்யவேண்டும். தண்ணீர் அதிகம் பருகுவது: குளிர்காலத்தில், சீதோஷ்ண நிலை அதிகரிக்கின்றது, எனவே பலர் தண்ணீர் பருகுவதில் குறைவு ஏற்படும். இது சரும பிரச்சனைகளுக்கான முக்கிய காரணியாக இருக்கக்கூடும். சருமத்திற்கு ஈரப்பதத்தை உறுதிசெய்யும் வகையில், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது முக்கியம். இதனால் சரும வறட்சி, பாதத்தில் வெடிப்பு போன்றவற்றை தவிர்க்கலாம். வெதுவெதுப்பான நீரில் ஜீரகம் கலந்தும் பருகலாம்.
குளிர்காலத்தில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சரும பராமரிப்பு குறிப்புகள்
மாய்ஸ்சரைசர் பயன்பாடு: குளிர்காலத்தில் சருமம் வறட்சி அடைவதால், அதனை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். அதனால் குளித்து முடித்ததும், தவறாது மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். மென்மையான ஃபேஸ் வாஷ்: குளிர்காலத்தில் முகத்தை அதிகம் ஸ்க்ரப் செய்வது தவிர்க்கவேண்டும், ஏனெனில் அது சருமத்தின் இயற்கை எண்ணெய்களை நீக்கி, சருமத்தை வறண்டு போகச் செய்யும். ஆகவே, குளிர்காலத்திற்கு ஏற்ப மென்மையான ஃபேஸ் வாஷ், சோப் மற்றும் கிளஸ்சர்களை பயன்படுத்துவது நல்லது. சன்ஸ்கிரீன் மற்றும் லிப் பாம் பயன்படுத்துதல்: குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியம். வெயில் காலத்தில் மட்டுமே அதன் பயன்பாடு நின்றுவிடக்கூடாது. குளிர்காலத்தில் புறஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும், உதட்டை பராமரிக்க லிப்-பாம் பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.