காதலர் தின ஸ்பெஷல்: இப்போது முரட்டு சிங்கிள்களும் காதலர் தினத்தை கொண்டாடலாம்!
உலகம் முழுவதும், ஆண்டுதோறும், பிப்ரவரி 14-ஆம் தேதி, காதலர் தினமாக, தம்பதிகளும், காதல் ஜோடிகளும், தங்கள் காதலை கொண்டாடும் நாள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் சிங்கிள்களும் காதலர் தினத்தை கொண்டாடலாமே! உலகிலேயே அவசியமான ஒரு காதல் உறவு என்றால், அது தன் மேல், தான் வைக்கும் காதலும், அன்பும் தான். அந்த காதலை கொண்டாட சில வழிகள் இதோ: 'முரட்டு சிங்கிள்ஸ்' பார்ட்டி: உங்களை போல சிங்கிள்களாக இருக்கும் நண்பரகளை இணைத்து, பார்ட்டி வைத்து கொண்டாடுங்கள். உங்களுக்கு பிடித்தமான உடை, உணவு, இசையுடன் கொண்டாடுங்கள் சோலோ டேட்: உங்கள் மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சோலோ டேட்டிற்கு செல்லுங்கள். ஒரு நாள், எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி, உங்களை நீங்களே கவனித்து கொள்ளுங்கள்.
அன்பு தேவைப்படுபவர்களுடன் அன்பை பரிமாறுங்கள்
சுவாரஸ்யமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: உணவகங்கள், கஃபேக்கள், சலூன்கள், ஸ்பா மற்றும் பல இடங்கள், காதலர் தினத்தில் ஜோடிகளை ஈர்க்கும் வகையில் சில கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகின்றன. அந்த மாதிரி சலுகைகளை நீங்களும், உங்கள் நண்பரும் சென்று பயன்படுத்துவதில் தவறில்லையே! முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லத்திற்குச் செல்லுங்கள்: காதலர் தினத்தன்று அன்பை பரிமாறிக்கொள்வது தான் முறை. அந்த அன்பை தேவைப்படுபவர்களுக்கு தருவது தானே சந்தோஷம். உங்கள் வளர்ச்சிக்கு உதவும் செயல்களில் ஈடுபடலாம்: சமூக வலைத்தளங்களில் இந்த நாளை பற்றி வரும் செய்திகளை பொருட்படுத்தாமல், இன்று ஒரு நாள், உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள உபயோகிக்கலாம். தோட்டவேலை, ஓவியம், சமையல் போன்ற இதர விஷயங்களில் கவனம் செலுத்தலாம். புதிய நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.