
மிஸ் நெதர்லாந்து 2023 பட்டத்தினை வென்ற முதல் திருநங்கை - குவியும் பாராட்டுக்கள்
செய்தி முன்னோட்டம்
மிஸ் நெதர்லாந்து 2023 பட்டத்தினை திருநங்கை ஒருவர் வென்றுள்ளார் என்னும் செய்தி அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்து நாட்டில், மாடலிங் துறையில் சிறந்து விளங்குபவர் ரிக்கி வலேரி கோலே.
ஒரு நடிகையாகவும் உள்ள இவர், ஒரு திருநங்கையாக இருக்கும் பட்சத்தில் இப்பட்டத்தினை வென்றுள்ளது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதன்படி இப்பட்டத்தினை வென்ற முதல் திருநங்கை என்னும் பெருமையினையும் இவர் பெற்றுள்ளார்.
இதனையடுத்து அவரின் தைரியம் மற்றும் நம்பிக்கையினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தனது வெற்றியினை ரிக்கி புகைப்படம் மற்றும் வீடியோவினை சமூக வலைத்தளம் மூலம் பதிவிட்டுவரும் நிலையில், இவருக்கான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மேலும் அவர் ஒரு நீண்ட பதிவினையும் எழுதியுள்ளார்.
அதில் கவனிக்கத்தக்க வாக்கியம் 'I Did It' என்பதாகும்.
திருநங்கை
'இந்த வெற்றி எனது சமூகத்திற்கே பெருமை' - ரிக்கி வலேரி கோலே
மேலும் அதில், "எனது சந்தோஷத்தினை வார்த்தையால் விவரிக்க முடியாது. இந்த வெற்றி எனது சமூகத்திற்கே பெருமைவாய்ந்ததாகும்" என்று கூறியுள்ளார்.
இந்த போட்டியில் இவரது பயணம் மிகுந்த ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தது என்றும், தன்னுடைய குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் தான் இந்த இடத்திற்கு தன்னை கொண்டு வந்தது என்றும் முன்னதாக ரிக்கி தனது பல நேர்காணல்களில் கூறியுள்ளது குறிப்பிடவேண்டியவை.
மேலும், இவர் இந்த போட்டியில் கலந்துக்கொள்ளும் இரண்டாம் திருநங்கை ஆவார்.
ஸ்பெயின் நாட்டினை சேர்ந்த ஏஞ்சலா போன்ஸ் என்னும் திருநங்கை இந்த போட்டியில் கடந்த 2018ம் ஆண்டு கலந்து கொண்டார்.
அவர் அப்பொழுது வெற்றிபெறவில்லை எனினும், போட்டியில் கலந்துகொண்ட முதல் திருநங்கை என்னும் பெருமையினை பெற்றவராவார்.