ரீயூஸ்சபிள் தண்ணீர் பாட்டிலில், கழிவறை இருக்கையை விட அதிக பாக்டீரியாக்கள் இருக்கிறதாம்!
இந்த வெயில் காலத்தில், நாள் முழுவதும் தண்ணீர் பருக வேண்டியது அவசியம். தண்ணீர் கொடுப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்ற படுகின்றன, ரத்தத்தையும் அது சுத்தீகரிக்கிறது என பல நன்மைகள், தண்ணீரை பற்றி பட்டியலிடப்படுகின்றன. அப்படி நன்மை தரக்கூடிய தண்ணீரை, வெளியே செல்லும் போது பாட்டிலில் நிரப்பி எடுத்து செல்வது தான் வாடிக்கை. ஆனால், சமீபத்தில் வெளியான அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் படி, அந்த பாட்டிலை இனி கவனமாக கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம். ஆம், WaterFilterGuru.com என்கிற இணையதளம் நடத்திய ஆய்வின் படி, நீங்கள் தினசரி பயன்படுத்தும், ரீயூஸ்சபிள் தண்ணீர் பாட்டில்களில், உங்களது கழிப்பறை இருக்கையை விட அதிக பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது.
கழிவறை இருக்கையை விட அதிகளவு பாக்டீரியாக்கள் தண்ணீர் பாட்டிலில் உள்ளது
ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட தண்ணீர் பாட்டிலில், சராசரியாக இரண்டு கோடியே 8 லட்சம் காலனிகளை உருவாக்கும் அலகுகள் (CFUs) இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், அதிக பாக்டீரியாக்கள் நிறைந்த இடம், பாட்டிலின் உட்புறம் அல்ல, பாட்டிலின் வாய் பகுதியில் தான். தண்ணீர் பாட்டிலில் உள்ள பாக்டீரியாவின் அளவைக் காட்ட, பல்வேறு வீட்டுப் பொருட்களுடன் ஒப்பிட்டது. அதில்தான், ஒரு கழிப்பறை இருக்கையை, விட தண்ணீர் பாட்டிலில் 40 ஆயிரம் பாக்டீரியா CFUகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இது செல்லப் பிராணிகளுக்கான கிண்ணத்தை விட 14 மடங்கு அதிகமாகவும், கம்ப்யூட்டர் மவுஸை விட ஐந்து மடங்கு அதிக இருந்தது. அதிர்ச்சி தரும் வகையில், தண்ணீர் பாட்டிலை விட, சமையலறை ஸிங்கில், இரண்டு மடங்கு குறைவான பாக்டீரியாக்கள் இருப்பதையும் கண்டறிந்தனர்.