
புரட்டாசி ஸ்பெஷல்: இந்த வாரம் வெஜிடேரியன் ஷீக் கெபாப் செய்து பாருங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்த வாரம், அசைவ பிரியர்களின் ஃபேவரைட் உணவான, ஷீக் கெபாப்பை, இறைச்சி துண்டுகள் நீக்கி, சைவ முறைப்படி செய்து பாருங்கள்.
இதை புதினா சட்னி அல்லது சாஸுடன் தந்தூரி ஸ்டார்டர் போல உண்ணலாம்.
ஷீக் கபாப் செய்முறையானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு பஞ்சாப் உணவு வகைகளிலிருந்து உருவானது.
இது பொதுவாக துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி கொண்டு தயாரிக்கப்படுகிறது.
மேலும் இது skewers கொண்டு வறுக்கப்படுகிறது.
இந்த ஷீக் கபாப்-ஐ பார்ட்டி ஸ்டார்ட்டராகவோ அல்லது நாண்/சப்பாத்தி கொண்டு ஃப்ராங்கியாகவோ அல்லது ரோலாகவோ பரிமாறலாம்.
card 2
தேவையான பொருட்கள்
2 தேக்கரண்டி எண்ணெய்
½ தேக்கரண்டி சீரகம்
¼ கப் வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
1 பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது)
2 டீஸ்பூன் கடலை மாவு
1 கப் முட்டைக்கோஸ்(மெல்லியதாக நறுக்கியது)
1 கேரட், துருவியது
½ கப் பட்டாணி
½ கப் பீன்ஸ்(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி, புதினா இலைகள்
card 3
தேவையான பொருட்கள்
3 டீஸ்பூன் முந்திரி(உடைத்தது)
2 நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கு வேகவைத்தது
1 தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
¼ தேக்கரண்டி சீரக தூள்
½ தேக்கரண்டி கரம் மசாலா தூள்
ருசிக்க உப்பு
¼ தேக்கரண்டி மிளகு பொடி
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
¼ கப் பிரட் க்ரம்பஸ்
3 தேக்கரண்டி எண்ணெய்
சாட் மசாலா 1 சிட்டிகை
card 4
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, சீரகத்தை வறுக்கவும்.
அதனுடன், வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
குறைந்த அனலில் அடுப்பை வைத்து, கடலை மாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பின்னர், கொத்தமல்லி, புதினா இலைகள் மற்றும் உடைத்த முந்திரி சேர்க்கவும்.
இந்த கலவையை ஒரு மிக்ஸியில் ஒன்றிரண்டாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
அரைத்த கலவையை ஒரு கிண்ணத்தில் கொட்டி, அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, மசாலா தூள்கள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
card 5
செய்முறை
மேலும் பிரட் க்ரம்ப்ஸ் சேர்த்து நன்கு பிசையவும்.
இப்போது அந்த கலவையை சிறு சிறு பந்துகளாக உருட்டி, ஸஃயுவர்ஸ்-இல் செருகவும்.
உங்களுக்கு தேவைப்படும் வடிவத்தில் அவற்றை நன்றாக ஸ்ப்ரெட் செய்யவும்.
எண்ணெய் தடவப்பட்ட சூடான தவாவில் கபாப்களை வறுக்கவும். அனைத்து பக்கங்களும் சமமாக வறுபட இடையில் சுழற்றவும்.
இறுதியாக, துண்டாக்கப்பட்ட முட்டைக்கோஸ், வெங்காயம் மற்றும் குடைமிளகாய்களுடன் பரிமாறவும்.