
இனிப்பான மங்களூர் பன் சாப்பிட்டதுண்டா? இதோ ரெசிபி
செய்தி முன்னோட்டம்
மங்களூர் பன்கள் என்பது ஒரு இனிப்பான வறுத்த பூரி ஆகும்.
இந்த இனிப்பு வாழைப்பழ பன்கள் அல்லது பூரி என்று அழைக்கப்படும் இவை, கர்நாடகாவின் மங்களூர் பகுதியின் சிறப்பு உணவாகும்.
பாரம்பரியமாக கர்நாடகாவின் ரோபஸ்டா வாழைப்பழத்துடன், மாவு கலந்து பிசைந்து, பூரி போல செய்யப்படும்.
இதை கோதுமை மாவு கலந்தும் செய்யலாம். அல்லது மைதா மாவுடன் சேர்த்தும் செய்யலாம்.
ஆனால், நன்றாக பழுத்த வாழைப்பழம் தான் அடிப்படை.
இந்த ஸ்னாக்ஸ்-ஐ மாலை வேளையில், சூடான காபி அல்லது டீ உடன் சாப்பிடுவது மங்களூர் மக்களின் வழக்கம்.
card 2
தேவையான பொருட்கள்
1 நடுத்தர அளவிலான ரோபஸ்டா வாழைப்பழம் அல்லது ஏதேனும் ஒரு வகை வாழைப்பழம், ஆனால், நன்றாக பழுத்திருக்க வேண்டும்.
3 தேக்கரண்டி சர்க்கரை அல்லது வெல்லம்
½ தேக்கரண்டி சீரக தூள்
1 சிட்டிகை உப்பு
2 சிட்டிகைகள் பேக்கிங் சோடா
1 முதல் 2 தேக்கரண்டி தயிர்
1.5 கப் முழு கோதுமை மாவு அல்லது மைதா மாவு அல்லது இரண்டையும் 50 : 50 எடுத்துக்கொள்ளலாம்
1 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய்
ஆழமாக வறுக்க தேவையான எண்ணெய்
card 3
செய்முறை
ஒரு பாத்திரத்தில், நறுக்கிய வாழைப்பழம் மற்றும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை, வாழைப்பழங்களை நன்றாக மசிக்க உதவும். அல்லது ஒரு மிக்ஸியில் வாழைப்பழங்களை மசித்து கொண்டு, பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்க்கலாம். வாழைப்பழத்தை நன்றாக மசிக்க வேண்டும்.
இப்போது இந்த மசித்த வாழைப்பழ கலவையில், மாவு, 1 தேக்கரண்டி தயிர், உப்பு, நெய், சமையல் சோடா மற்றும் சீரக தூள் சேர்க்கவும்.
கலவை உலர்ந்து போல் தோன்றினால், மீண்டும் 1 தேக்கரண்டி தயிர் சேர்த்து பிசையவும். மிருதுவான மாவாக பிசையவும்.
மாவு சற்று ஒட்டும். எனவே பிசையும் போது கைகளில் சிறிது எண்ணெய்/நெய் தடவி பிசையலாம்.
card 4
செய்முறை
மாவு மிகவும் பிசுபிசுப்பாக இருந்தால், சிறிது கோதுமை மாவு மற்றும் சர்க்கரை சேர்க்கவும். மாவை அறை வெப்பநிலையில், 3 முதல் 4 மணி நேரம் ஒரு கிண்ணத்தில் மூடி வைக்கவும் அல்லது இரவு பிசைவதாக இருந்தால்,மாவை 7 முதல் 8 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
மாவின் வெளிப்புற மேற்பரப்பில் சிறிது எண்ணெய் தடவலாம். இதனால் இவ்வளவு நேரம் வெளியில் இருப்பதால், அது வறண்டு போகாது.
அடுத்த நாள் காலை அல்லது 3 முதல் 4 மணி நேரம் வெளியில் வைத்துவிட்டு, மாவை லேசாக பிசையவும்.
card 5
செய்முறை
இப்போது மாவை, பூரி போல உருட்டவும்.
மெல்லியதாக தேய்க்க வேண்டாம். சிறிது தடிமனாக தேய்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒரு சட்டியில், மிதமான அனலில் வைத்து, பூரியை சுட்டு எடுக்கவும்.
வறுக்கும்போது, வாழைப்பழ பன்கள் எண்ணெயில் உடையாமல் பார்த்துக்கொள்ளவும்.
மங்களூர் பன்களை சூடாக, ஒரு கப் காபியுடன் பரிமாறவும்!
பின்குறிப்பு:
அதிக இனிப்பு பன்களுக்கு, நீங்கள் அதிக சர்க்கரை சேர்க்கலாம். சர்க்கரை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சேர்ப்பது வாழைப்பழத்தின் இனிப்பைப் பொறுத்தது.
மாவு மென்மையாகவும், சற்று ஒட்டும் தன்மையுடனும் இருக்க வேண்டும்.
வறுக்கும்போது எண்ணெயின் வெப்பநிலை மிதமான சூடாக இருக்க வேண்டும்.
தயிர் பயன்படுத்தப்படுவதால், மாவை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும்.
அவை சூடாகவோ பரிமாறப்படும்போது மிகவும் சுவையாக இருக்கும்.