
காரசாரமான ஸ்பைசி கார்லிக் டோஃபு செய்வது எப்படி
செய்தி முன்னோட்டம்
சோயா பாலில் இருந்து செய்யப்படும் டோஃபு, வீகன் உணவை தேர்வு செய்தவர்களுக்கும், பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் சிறந்த மாற்று.
பாலில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் சோயா பாலில் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சொல்ல போனால், பசும்பாலை விட சோயா பால் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த நேரத்தில், டோஃபு பயன்படுத்தி, காரசாரமான, ஸ்பைசி கார்லிக் டோஃபு செய்வது எப்படி என்பதை இங்கே காண்போம்.
இதை குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் மெனுவாக கூட செய்தனுப்பலாம். அல்லது மாலை நேர ஈவினிங் ஸ்னாக்ஸ்-ஆகவும் சாப்பிடலாம்.
card 2
தேவையான பொருட்கள்
டோஃபு- 500 கிராம் (துண்டுகளாக நறுக்கியது)
பூண்டு- 7-8 பல் (தோலை உரிக்க வேண்டாம்)
இஞ்சி- 2 இன்ச்
வர மிளகாய்- 8-10
உப்பு- 1 டீஸ்பூன்
சோயா சாஸ்- 2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்- 2
டீஸ்பூன் மிளகு தூள்- 1 தேக்கரண்டி
நறுக்கிய பச்சை வெங்காயம் - அலங்கரிக்க
card 3
செய்முறை
காய்ந்த மிளகாய், இஞ்சி, எள், உப்பு மற்றும் பூண்டு (தோலுடன்) ஒரு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் மிதமான சூட்டில் எண்ணெயை சூடாக்கி, மசாலா கலவையில் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
பின்னர் சோயா சாஸ், மிளகு தூள் மற்றும் துண்டாக நறுக்கப்பட்ட டோஃபு-ஐ சேர்க்கவும். மசாலா மற்றும் சோயா சாஸ், டோஃபுவுடன் நன்றாக மிக்ஸ் ஆகும் வரை, மெல்லிய தணலில் வைத்து பிரட்டவும்.
டோஃபு சிறிது பொன்னிறமாகவும், வெளியில் மிருதுவாகவும் மாறும் வரை, 2 நிமிடங்கள் வேகவிடவும்.
இப்போது, இந்த சூடான, சுவையான ஸ்பைசி கார்லிக் டோஃபு-வை, நறுக்கிய பச்சை வெங்காயம் மற்றும் எள்-ஐ தூவி அலங்கரித்து பரிமாறவும்.