
சமையல் குறிப்பு: முட்டை இல்லாத டோனட் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
நம்மூர் பாதுஷா போன்றது தான் மேலை நாடுகளின் டோனட்.
தற்போது பல இடங்களில் பரவலாக கிடைக்க கூடிய இந்த இனிப்பு பன் வகை, நீங்கள் நினைத்து கொண்டிருப்பது போல, பேக்கரியில் மட்டுமே தயார் செய்ய முடிகின்ற உணவென்று.
இதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம். அதே நேரத்தில் முட்டை சேர்க்காமல், மிருதுவாகவும், புசுபுசுவென அழகான டோனட்டை எளிதாக இப்போது யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
அதன் செய்முறை இதோ உங்களுக்காக:
card 2
தேவையான பொருட்கள்
1.5 கப் மைதா + மாவு திரட்ட சிறுதளவு
½ கப் பால் + 3 டீஸ்பூன்
2 தேக்கரண்டி உருக்கிய வெண்ணெய்
1 தேக்கரண்டி சர்க்கரை
1 தேக்கரண்டி இன்ஸ்டன்ட் ஈஸ்ட்
¼ தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
½ தேக்கரண்டி உப்பு
card 3
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், ஈஸ்ட், சர்க்கரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
நன்றாக கலக்கவும். நடுவில் லேசாக குழி செய்து, அதில், உருக்கிய வெண்ணெய், சூடான பால் சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்று சேர்த்து மாவை போல பிசைந்து கொள்ளவும்.
மாவு ஒட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.
ஆனால் தண்ணீராக இருக்கக்கூடாது. எனவே பால் அல்லது மாவு தேவைக்கேற்ப ஊற்றி சரி செய்துகொள்ளவும்.
5 நிமிடங்களுக்கு பிசைந்து, ஒரு இதமான சூடு உள்ள இடத்தில் கிண்ணத்தை மூடி வைக்கவும்.
1 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு இரட்டிப்பாகி இருக்கும்.
மீண்டும் சீராக பிசையவும். ஒட்டும் தன்மையை தவிர்க்க கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
card 4
செய்முறை
சுத்தமான மேடையில், மாவைத் தூவி, பிசைந்த மாவை சிறிது தடியாக, சப்பாத்தி போல திரட்டி கொள்ளவும்.
பின்னர், ஒரு மூடி அல்லது வட்டமான குக்கீ கட்டரைப் பயன்படுத்தி, வட்டங்களாக வெட்டவும்.
வட்டத்தின் உள்ளே துளையிட சிறிய மூடி/குக்கீ கட்டரைப் பயன்படுத்தவும்.
மீதமுள்ள மாவில், அதே செயல்முறையைப் பயன்படுத்தி, டோனட் தயார் செய்யவும்.
ஒரு வாணலியில், போதுமான எண்ணெயை சூடாக்கி, டோனட்ஸை கவனமாக எண்ணெயில் விடவும்.
ஒன்றோடொன்று ஓட்டக்கூடாது. எண்ணெய் மிகவும் சூடாக இருக்கக்கூடாது.
அதனால் மிதமான தணலில் சுட்டு எடுக்கவும். இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
சூடாக இருக்கும் போதே, பொடியாக்கிய சர்க்கரையை தூளை தூவி அடுக்கி வைக்கவும்.