
சமையல் குறிப்பு: பார்பேக்யூ ஸ்டைல் ஹனி சில்லி பொட்டேட்டோ செய்முறை!
செய்தி முன்னோட்டம்
தற்போது பல ஊர்களில் பார்பேக்யூ உணவகங்கள் பிரபலமாகி வருகிறது. அங்கே மிகவும் பிரபலமான உணவு இந்த ஹனி சில்லி பொட்டேட்டோ!
பொதுவாகவே உருளைக்கிழங்கு வைத்து எந்த ரெசிபி செய்தாலும் அனைத்தும் காலி ஆகிவிடும். அதேபோல, உருளைகிழங்கை வைத்து, பல ருசியான உணவுகளையும் சமைக்கலாம். வறுவல், பொரியல், பொடிமாஸ் என பல விதங்கள் உண்டு.
அந்த வகையில் இன்று நாம் இந்த பார்பேக்யூ ஸ்டைல் ஹனி சில்லி பொட்டேட்டோ செய்வது எப்படி என பார்ப்போம்.
card 2
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்குகள்- 4
மைதா- 1 கப்
அரிசி மாவு- 1 கப்
மிளகு தூள்- 1 டேபிள் ஸ்பூன்
ரெட் ஃபுட் கலர்- 1/2 டீ ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையானஅளவு
வதக்குவதற்கு:
வெங்காயம்- 1/2 கப் (பெரிதாக நறுக்கியது)
கேப்ஸிகம் - 1/2 கப் (பெரிதாக நறுக்கியது)
தக்காளி- 1/2 கப் (பெரிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய்- 2 கீறியது
சாஸ் தயாரிப்பதற்கு:
டொமேட்டோ சாஸ்- 1/2 கப்
செஷ்வான் சாஸ்- 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ்- 2 டேபிள் ஸ்பூன்
தேன்- 2 டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள்- 2 டேபிள் ஸ்பூன்
card 3
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்குகளை, தோல் நீக்கி, பிரெஞ்சு ப்ரைஸ்க்கு வெட்டிக் கொள்வது போல் நீளமாக வெட்டி கொள்ளவும்.
கொதிக்கும் தண்ணீரில், வெட்டிய உருளைக் கிழங்குகளை போட்டு பாதி வெந்ததும், தண்ணீரை வடித்து, தனியே எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு மற்றும் மைதா மாவு சேர்த்து, அதில் வெந்த உருளைக்கிழங்குகளை போட்டு நன்றாக பிரட்டி கொள்ளவும்.
இந்த கலவையை சுமார் 7 மணி நேரம், ஃப்ரீசரில் வைத்துக் கொள்ள வேண்டும்.
card 4
செய்முறை:
மற்றொரு கிண்ணத்தில், அரிசி மாவு ,மைதா,மிளகு தூள், ஃபுட் கலர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, திக்கான பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.
ஃப்ரீசரில் இருந்த கிழங்குகளை எடுத்து இந்த கலவையில் சேர்த்து மெதுவாக பிரட்டி விட்டு, சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
card 5
செய்முறை
ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி, அனலை சிம்மில் வைத்துக் கொண்டு கிழங்குகளை பொன்னிறமாக பொரித்து கொள்ள வேண்டும்.
பின் அதே கடாயில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், கேப்ஸிகம்,தக்காளி ஆகியவற்றை சேர்ந்து 2 நிமிடம் வதக்கி, அதில் மிளகுத்தூள் மற்றும் அனைத்து சாஸ் வகைகளையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த கலவையில் பொரித்து வைத்துள்ள கிழங்குகளை சேர்த்து லேசாக கிளறி, இறுதியாக தேனை ஊற்றி, சிறிது வெள்ளை எள்ளை தூவினால் சூடான ஹனி சில்லி பொட்டேட்டோ தயார்!