Page Loader
30 நிமிட பயணத்திற்கு 3 மணி நேரக் காத்திருப்பு.. பெங்களூருவில் ருசிகர சம்பவம்
30 நிமிட பயணத்திற்கு 3 மணி நேரக் காத்திருப்பு.. பெங்களூருவில் ருசிகர சம்பவம்

30 நிமிட பயணத்திற்கு 3 மணி நேரக் காத்திருப்பு.. பெங்களூருவில் ருசிகர சம்பவம்

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 02, 2023
10:39 am

செய்தி முன்னோட்டம்

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ரேஃபிடோவுக்கு புக் செய்தால், அதிகபட்சம் 15 அல்லது 20 நிமிடங்களில் நமக்கான வாகனம் வந்து விடும். ஆனால் பெங்களூருவில் ரேஃபிடோவுக்கு புக் செய்த பயனர் ஒருவருக்கு 3 மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டும் எனக் காட்டியிருக்கிறது. வாகன நெரிசலுக்குப் பெயர் போன பெங்களூருவில் இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் 10 நிமிட பயணத்திற்கு ரேஃபிடோ புக் செய்து, அந்த வாகனம் வருவதற்கு 1 மணி நேரத்திற்கும் மேல் காத்திருப்புக் காலத்தைக் காட்டியிருக்கிறது அச்சேவைத் தளம். இந்த சம்பவம் குறித்து அவர் ட்விட்டரில் பகிர, ரேஃபிடோ நிறுவனம் அவரிடம் 'டிரைவர்கள் குறைவாக இருப்பதாக'க் கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டு மறுமொழி ஒன்றையும் பதிவிட்டிருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

ரேஃபிடோ பயனரின் பதிவும், ரேஃபிடோவின் மறுமொழியும்: