
புரட்டாசி ஸ்பெஷல்: மெதுவடை இப்படி செய்து பாருங்க! ருசியா இருக்கும்
செய்தி முன்னோட்டம்
பண்டிகைகள், விசேஷங்கள் என்றாலே, நம் வீட்டில் தவறாமல் இடம் பிடிக்கும் முக்கியமான உணவு, வடை தான். இறைவனுக்கு படைப்பதாகட்டும், திருமண விழாக்களாகட்டும், இலையில் வடை இல்லாமல் நிச்சயம் இருக்காது.
அதேபோல, மாலை டிபினாக நமது ரோட்டோர கடைகளில் விற்கப்படும் இந்த சூடான, மொறுமொறுப்பான வடை மற்றும் கெட்டி சட்னிக்கு, எப்போதுமே டிமாண்ட் உண்டு.
இந்த உணவு, ஆரோக்கியத்திலும் டாப் ரகம் தான்.
மெது வடை தயார் செய்ய பயன்படுத்தப்படும் உளுந்து, உடலின் ஆரோக்கியத்திற்கும் உறுதிக்கும் உதவுகின்றன. குறிப்பாக எலும்புகளுக்கு நல்ல வலு தருகின்றன.
card 2
தேவையான பொருட்கள்:
உளுந்து-250கிராம்
இஞ்சி-சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
மிளகு,சீரகம்-1/4 ஸ்பூன்
பெருங்காயம்-2
சிட்டிகை வெங்காயம்-1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய்-1 (பொடியாக நறுக்கியது)
சோடா உப்பு-1 சிட்டிகை
கருவேப்பிலை- 1 கொத்து
அரிசி மாவு-1 டேபிள்ஸ்பூன்
card 3
செய்முறை
முதலில் உளுந்தை நன்கு அலசிவிட்டு அவற்றுடன் தண்ணீர் சேர்த்து சுமார் 1 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு மிக்சியிலோ, கிரைண்டரிலோ, ஊற வைத்திருக்கும் உளுந்தம் பருப்பை இட்டு அரைத்து கொள்ளவும்.
இதை அரைக்கும் போது, அளவாக தண்ணீர் தெளித்து அரைக்க வேண்டும்.
அதிகமாக தண்ணீர் சேர்த்தால், வடை எண்ணெய் குடிக்கும்.
மாவு வடை சுடும் பதத்திற்கு நன்கு அரைத்தததும், ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துகொள்ளவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள வடை மாவுடன் இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம், வெங்காயம், பச்சைமிளகாய், சோடா உப்பு, கருவேப்பிலை, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு ஆகிய்வற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
card 4
மெது வடை/ உளுந்து வடை செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ள மாவை, கையில் வாழை இலை வைத்து, வடை வடிவில் தட்டி, நடுவில் ஒரு விரலால் ஓட்டை போட்டு, பொறுமையாக எண்ணெயில் இட்டு பொரித்துக் எடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்துவைத்துள்ள மாவை கையில் வாழை இலை வைத்து வடை வடிவில் தட்டி, நடுவில் ஒரு விரலால் ஓட்டை போட்டு, பொறுமையாக எண்ணெயில் இட்டு பொரித்துக் எடுக்கவும்.
வாழை இல்லை என்றால், கைகளை நினைத்துக்கொண்டு, உள்ளங்கைகளில் தட்டி, சுட்டு எடுக்கலாம்.
வடை சுடும் போது, அடுப்பில் அனல் சீராக இருக்கவேண்டும். அப்போது தான், வடை உள்ளேயும், வெளியேயும் நன்றாக வெந்து பொரியும்.
card 5
டிப்ஸ்:
வடை மாவு அரைக்கும் போது, தண்ணீர் கூடுதலாக போய்விட்டால், சிறிது கூடுதலாக அரிசி மாவை சேர்த்து கொள்ளுங்கள்.
வடை சுடும்போது வெங்காயமும், உப்பும் சேர்த்து கொள்ளவும், இல்லையென்றால், வெங்காயத்தில் இருந்து வெளியேறும் நீர், மாவை மேலும் நீர்த்துப்போக செய்யும்.
சிறு குழந்தைகள், பெரியவர்கள் போன்றவர்களுக்கு, இஞ்சி, பச்சை மிளகாய் பற்களில் மாட்டும் என நினைத்தால், இஞ்சி, சிறிது மிளகு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து மாவில் கரைத்து விடலாம்.
உளுந்து அரைக்கும் போது, சிறிய அளவு வேக வாய்த்த உருளை கிழங்கையும் சேர்த்து அரைத்து, செய்து பாருங்கள், ருசி அபாரமாக இருக்கும்.