
தீபாவளிக்கு பலகாரங்கள் வாங்கும் போது, நீங்கள் கவனிக்க வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
தீபாவளியின் போது பலகாரங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், கடைகளில் விற்கப்படும் பலகாரத்தின் சுவை மற்றும் பொருட்கள் இரண்டிலும் தரம் குறைக்கப்படுகிறது.
பொதுவாக இது போன்ற விழாக்களின் சமயம், வியாபாரிகள் லாபம் ஈட்ட நினைப்பதால், சிலர் தங்கள் தயாரிப்புகளின் தரத்தில் சமரசம் செய்து, தங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தில் விளையாண்டு விடக்கூடும்.
இந்தக் கவலைகளைத் தீர்க்க, நீங்கள் வாங்கும் பொருட்களின் தரத்தினை சோதனை செய்து வாங்க வேண்டும்.
அது எப்படி? இதோ நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
card 2
முடிந்தவரை ஃப்ரஷ்ஷான தயாரிப்புகளையே வாங்குங்கள்
நீங்கள் இனிப்புகளை வாங்குவதற்கு முன்பு எப்போதும் பொருட்களின் வாசனை அல்லது சாம்பிள் டேஸ்ட் பார்த்து வாங்க வேண்டும்.
இந்த பலகாரங்களில் வித்தியாசமான சுவை இருந்தால், அவற்றை வாங்காமல் இருப்பது நல்லது. காரணம் பழையதை மறைக்க, செயற்கை சுவை கூட்டப்பட்டிருக்க வாய்ப்புண்டு.
அதோடு, பலகாரங்கள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட பலகாரங்கள் வாங்கும் போது, பேக்கிங் தேதியை சரிபார்க்கவும். அப்போதுதான் அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
வீட்டில் தயாரிக்கக்கூடிய பலகாரத்திற்கு, நீங்கள் மூலபொருட்கள் வாங்கும் போதும், அவற்றின் தரம், தயாரிப்பு தேதியை பார்த்து வாங்க வேண்டும்.
பழைய பொருட்களை சேர்த்து தயாரித்தால், விரைவில் உங்கள் பலகாரம் கெட்டுப்போய் விடும், அதோடு சுவையும் மாறிவிடும்.