பொங்கல் 2025: சர்க்கரை பொங்கல் செய்ய நீங்கள் பயன்படுத்தவுள்ள வெல்லம் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா?
செய்தி முன்னோட்டம்
வெல்லம் என்பது இயற்கையான இனிப்பு பொருளாகும். பொங்கல் பண்டிகை உணவில் சேர்க்கப்படும் முக்கிய பொருளாகும்.
அதுமட்டுமின்றி, இது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஒரு ஆரோக்கிய மாற்றாக தற்போது அதிகம் பேர் பயன்படுத்தும் பொருளாக மாறிவிட்டது.
இதைதான் காலம்காலமாக நமது முன்னோர்கள் தங்கள் பலகாரங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். அப்பம், அதிரசம், அக்காரவடிசல் என பண்டைய உணவுகள் அனைத்திலும் இனிப்பிற்காக வெல்லத்தை சேர்ப்பதுண்டு.
இந்த வெல்லத்தில் உள்ள இரும்பு சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் உடலுக்கு நன்மை தருகிறது.
இருப்பினும், கலப்படம் நிறைந்த தற்போதைய காலத்தில், சந்தையில் கிடைக்கும் இயற்கையான வெல்லம் அனைத்துமே தூய்மையானது அல்ல.
நாளை பொங்கல் திருநாளாம் தை 1 அன்று பயன்படுத்தவுள்ள உங்கள் வெல்லத்தின் தரத்தை எப்படி சோதித்து பார்ப்பது?
தரம்
வெல்லத்தின் தரத்தை அளவிடுவது எப்படி?
நிறம்: வெல்லத்தின் தரம் முக்கியமாக அதன் நிறத்தில் உள்ளது. தூய்மையான வெல்லம் அடர் பழுப்பு நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறமானது இரசாயன சிகிச்சையின் அடையாளமாக இருக்கலாம்.
சுவை: சுத்தமான வெல்லம் ஒரு தனி சுவை கொண்டது. சுத்தமான வெல்லத்தில் இனிப்பு மற்றும் மர வாசனை கலந்து இருக்கும். மாறாக அதீத இனிப்போ, மெல்லிய உப்பு சுவை இருந்தால் அதில் கலப்படம் உண்டு.
நீர் சோதனை: கலப்படமற்ற வெல்லம் தண்ணீரில் முழுமையாக கரையக்கூடியதாக இருக்க வேண்டும். மாறாக பச்சைத்தண்ணீரில் கரைக்கும் போதே, பாகுபதம் வந்தால், அது கலப்படம். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்தால், அது பழுப்பாக, பளபளப்பான மற்றும் ஒளிஊடுருவக்கூடிய தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும்.