Page Loader
காலநிலை மாற்றத்தால் அமெரிக்காவில் அழிந்து போன தாவர இனம்

காலநிலை மாற்றத்தால் அமெரிக்காவில் அழிந்து போன தாவர இனம்

எழுதியவர் Sindhuja SM
Jul 14, 2024
03:34 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கீ லார்கோ மர கற்றாழை என்ற தாவர இனம், கடல் மட்ட உயர்வு காரணமாக காடுகளில் அழிந்து வருகிறது. டெக்சாஸின் தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்ட உயர்வு, தீவிரமடையும் புயல்கள் மற்றும் அலைகளின் வேகம் ஆகியவற்றால் புளோரிடா கீஸில் ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த இந்த இனம் அழித்துவிட்டன. "நாம் ஏதாவது செய்யாவிட்டால், இந்த இழப்பு வேகமாக நடக்கும்" என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரான ஜார்ஜ் கேன் எச்சரித்துள்ளார். 2011 ஆம் ஆண்டில், ஜான் பென்னேகாம்ப் பவளப்பாறை மாநில பூங்காவில் தோராயமாக 150 கீ லார்கோ மர கற்றாழைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

காலநிலை மாற்றம் 

உயரும் கடல் மட்டங்கள்: புளோரிடாவின் பூர்வீக இனங்களுக்கு அச்சுறுத்தல்

2015 ஆம் ஆண்டளவில், விலங்குகளின் தாக்குதல்கள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக அதன் மொத்த எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாவரம் அதிகமாக கடற்கரைகளில் இருப்பதால், அதிகமான உப்பு தன்மையும் அதை கெடுத்துவிட்டது. "அதிக உப்பு என்பது பெரும்பாலான தாவரங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்று ஆய்வு இணை ஆசிரியரும் ஆராய்ச்சி தாவரவியலாளருமான ஜேம்ஸ் லாங்கே விளக்கியுள்ளார். இந்நிலையில், 2021 ஆம் ஆண்டளவில், கடல் அலைகள் மற்றும் புயல்களின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சில கற்றாழைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. புளோரிடா கீஸைச் சுற்றியுள்ள கடல் மட்டங்கள் 1971 முதல் ஆண்டுக்கு சராசரியாக 0.16-அங்குலங்கள் அதிகரித்து வருகின்றன. இது பல உயிரினங்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது.