மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது?
மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை (பேலியேட்டிவ் கேர்) என்பது தீவிர நோயுடன் வாழும் முதியோர்களுக்கு ஒரு சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும் சிகிச்சை முறையாகும். இந்த வலி குறைப்பு சிகிச்சை முறை (பேலியேட்டிவ் கேர்) நோயினால் பாதிக்க பட்டவர்களின் நோய் அறிகுறிகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.மரணவலி தணிப்புச் சிகிச்சையானது,சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற நிபுணர்களைக் கொண்ட குழுவால் நடத்தப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை, நோயாளியின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலும் இதில் நோயுடன் வாழும் முதியோர்களை பராமரிக்கின்றனர்.
முதியவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான 'மரணவலி தணிப்புச் சிகிச்சை'
நோய் வாய்ப்பட்ட வயதான பெரியவர்கள் கடுமையான உடல்நல குறைபாடுகளினால் பலவிதமான வலிகள் மற்றும் அசௌகரியங்களை அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது. மேலும் பலவீனம் மற்றும் கவனக்குறைவு ஆகியவற்றுடன், முதியவர்கள் எதிர்கொள்ளும் ஒரு மிக பெரிய நோய் தனிமை ஆகும். இவை அனைத்திற்கும் தீர்வாக 'மரணவலி தணிப்புச் சிகிச்சை' உள்ளது. மருத்துவர்கள், வலி மேலாண்மை மற்றும் நோய் அறிகுறிகள் கட்டுப்பாட்டில் கூடுதல் பயிற்சி மற்றும் அனுபவம் கொண்ட நிபுணர்களாக இருப்பதால், எளிதில் அவர்களின் மன அழுத்தத்தை புரிந்து கொண்டு செயல் படமுடியும். சிகிச்சையின் மற்றொரு குறிப்பிடத்தக்க நன்மை என்னவென்றால், இந்த மருத்துவர்கள் கடினமான மருத்துவ முடிவுகளை எடுக்க அவரவர் குடும்பங்களுக்கு உதவ முடியும்.