LOADING...
சத்தான கேஜூன் கொண்டைக்கடலை சாலட்: எளிமையான செய்முறை!
சத்தான கேஜூன் கொண்டைக்கடலை சாலட் செய்முறை

சத்தான கேஜூன் கொண்டைக்கடலை சாலட்: எளிமையான செய்முறை!

எழுதியவர் Vasuki
Jun 14, 2026
03:51 pm

செய்தி முன்னோட்டம்

இப்போதெல்லாம் நம் அன்றாட உணவில் சாலட் (Salat) சேர்த்துக் கொள்வது பலரிடமும் மிகவும் பிரபலமாகி வருகிறது. சுவையுடன் உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தையும் தருவதால், உடல் நலனில் அக்கறை உள்ள பலரும் இதனை மிகவும் விரும்புகிறார்கள். தினமும் ஒரே மாதிரியாக இல்லாமல் ஒரு புதுவிதமான சாலட் சாப்பிட நினைத்தால், இந்த கேஜூன் கொண்டைக்கடலை (Cajun Chickpea) சாலட் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த சாலட்டில் உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து (Fiber) மற்றும் புரதச்சத்துக்கள் மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. இதனைச் செய்வதும் மிகவும் சுலபம் வாருங்கள், இந்தச் சத்தான கேஜூன் கொண்டைக்கடலை சாலட்டை எப்படித் தயாரிப்பது என்று பார்ப்போம்.

பொருட்கள்

தேவையான பொருட்கள்

1. ஒரு கப் வேகவைத்த சுண்டல் 2. ஒரு பெரிய கேரட் (துருவியது) 3. ஒரு குடமிளகாய் (பொடியாக நறுக்கியது) 4. ஒரு தக்காளி (பொடியாக நறுக்கியது) 5. பாதி வெள்ளரிக்காய் (பொடியாக நறுக்கியது) 6. ஒரு வெங்காயம் (பொடியாக நறுக்கியது) 7. ஒரு கப் வேகவைத்த ப்ரோக்கோலி 8. அரை தேக்கரண்டி மிளகாய் தூள் 9. அரை தேக்கரண்டி சீரகத் தூள் 10. உப்பு (சுவைக்கு ஏற்ப) 11. ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு 12. கொஞ்சம் கொத்தமல்லி தழை (பொடியாக நறுக்கியது)

செய்முறை - படி 1

சுண்டலை ஊறவைத்தல்

கேஜுன் சுண்டல் சாலட் செய்வதற்கு, முதலில் தேவையான அளவு கொண்டைக்கடலையை (சுண்டல்) இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊறவைத்த தண்ணீரை வடிகட்டிவிட்டு, சுண்டலைச் சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவி வேகவைக்க வேண்டும். சுண்டல் நன்றாக வெந்து வந்ததும், அதனைத் தனியாக எடுத்து ஆறவிட வேண்டும். பின்னர், ஒரு பெரிய பாத்திரத்தில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் வேகவைத்த புரோக்கோலியையும் சேர்த்து ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

Advertisement

செய்முறை - படி 2

மசாலா சேர்த்தல்

ஒரு சிறிய கிண்ணத்தில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு மற்றும் எலுமிச்சைச் சாற்றை நன்றாகக் கலக்கவும். இந்த மசாலா கலவையை, வேகவைத்த கொண்டைக்கடலையுடன் (சுண்டல்) சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு, இதனுடன் தயார் செய்து வைத்துள்ள காய்கறி கலவையைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். கடைசியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் விருப்பப்பட்டால் சாட் மசாலா தூவவும். பரிமாறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு கொண்டைக்கடலையை மற்ற பொருட்களுடன் கலந்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும். இப்போது சத்தான சாலட் தயார்!

Advertisement

கூடுதல் குறிப்பு

சாலட்டை சுவையானதாக மாற்ற ஒரு டிப்ஸ்

இந்தச் சாலட்டை இன்னும் சற்றுக் கூடுதல் சுவையாக மாற்ற விரும்பினால், சிறிதளவு ஆலிவ் ஆயில் (Olive oil) சேர்த்துக்கொள்ளலாம். அதோடு, சில வறுத்த முந்திரி அல்லது பாதாம் பருப்புகளைச் சேர்த்தாலும் நன்றாக இருக்கும். இது சாலட்டின் சுவையை அதிகரிப்பதுடன், அதனை இன்னும் சத்தானதாகவும் மாற்றும். விருப்பப்பட்டால், மாதுளை அல்லது ஆப்பிள் துண்டுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் சாலட்டை இன்னும் சிறப்பானதாகவும், சுவையானதாகவும் மாற்றலாம்.

Advertisement