புத்தாண்டை ஆரோக்கியமாக தொடங்க நச்சுக்களை நீக்கும் 'முருங்கைக்கீரை ஜூஸ்' குடிக்கலாம்
செய்தி முன்னோட்டம்
புத்தாண்டு என்றாலே புதிய தீர்மானங்களும், ஆரோக்கியமான உணவு பழக்கங்களுமே பலரின் நினைவுக்கு வரும். அந்த வகையில், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய 'சூப்பர் ஃபுட்' (Superfood) பானமாக முருங்கைக்கீரை ஜூஸ் திகழ்கிறது. இன்று புத்தாண்டை வரவேற்க பலரும் கொண்டாட்டங்களை திட்டிமிடும் நேரத்தில், பலவகையான உணவுகளும் அதில் இடம்பெற்றிருக்கும். இந்த உணவுகள் உங்கள் ஆரோகியத்தை பாதிக்குமா என கவலை வேண்டாம். ஒரு டம்ளர் முருங்கைக்கீரை சூப் போதும்! உடலில் உள்ள நச்சத்துகள் எல்லாம் வெளியேற்றி விடும். மேலும், நவீன 'ஆரோக்கிய' போக்குகளுக்கு முன்னரே, நமது இந்திய சமையலறைகளில் முருங்கைகாயும், கீரையும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதன் மகத்துவத்தை மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவ குணங்கள்
முருங்கை ஜூஸ் ஏன் அவசியம்?
இயற்கையான நச்சு நீக்கி: பண்டிகை மற்றும் கொண்டாட்ட காலங்களில் நாம் உட்கொண்ட கொழுப்பு நிறைந்த மற்றும் இனிப்பு உணவுகளால் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற முருங்கைக்கீரை ஜூஸ் உதவுகிறது. ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம்: இதில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் தாவர அடிப்படையிலான புரதங்கள் நிறைந்துள்ளன. இது அன்றாட ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. செரிமானத்திற்கு சிறந்தது: நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது செரிமான மண்டலத்தை சீராக்கி, உடலின் சமநிலையை பராமரிக்கிறது. எளிமையான தயாரிப்பு: மற்ற ஆரோக்கிய பானங்களை போலன்றி, இதை தயாரிப்பது மிக எளிது. சமைக்க தேவையில்லாதது மற்றும் உடலால் எளிதில் உறிஞ்சப்படக்கூடியது. பாரம்பரியத் தீர்வு: இது இயற்கையோடு இணைந்த ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது.
தயாரிப்பு
முருங்கை ஜூஸ் தயாரிக்கும் முறை
தேவையானவை: 1 கப் புதிய முருங்கை இலைகள், 1 கப் தண்ணீர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் (தேவைப்பட்டால்). செய்முறை: இலைகளை நன்கு கழுவி, தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் அதை வடிகட்டி, சுவைக்காக எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது.