NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; அப்படியென்றால் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; அப்படியென்றால் என்ன?
    குரங்குகளுடன் ஏற்பட்ட தகராறில் இந்த தொற்று ஏற்பட்டது.

    ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; அப்படியென்றால் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 06, 2024
    04:37 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏற்கனவே கொரோனா தொற்று பரப்பிய அதே சீனாவில் மற்றுமொரு அரியவகை தொற்று ஏற்பட்டுள்ளது.

    ஹாங்காங்கைச் சேர்ந்த 37 வயதான ஒருவருக்கு, அரிதான, ஆபத்தான பி வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    குரங்குகளுடன் ஏற்பட்ட தகராறில் இந்த தொற்று ஏற்பட்டது. இதுபோன்ற தொற்று மனிதனுக்கு ஏற்பட்டது சீன பிராந்தியத்தில் இதுவே முதல்முறை.

    சுகாதார அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்படி, நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஹெர்பெஸ்வைரஸ் சிமியே என்றும் அழைக்கப்படும் பி வைரஸ், குரங்குகளின் ஒரு இனமான மக்காக்களிடையே பரவலாக உள்ளது.

    விலங்குகளில், இது பொதுவாக வாயை சுற்றி குளிர் புண்கள் ஏற்படுத்தும். இருப்பினும், மனிதர்களை தாக்கும்போது, ​​மூளையழற்சி அல்லது மூளை வீக்கம் உட்பட நரம்பு மண்டலத்தில் கடும்சேதத்தை ஏற்படுத்தும்.

    தாக்கம்

    பி வைரஸின் பரவுதல் மற்றும் இறப்பு விகிதம்

    பாதிக்கப்பட்ட மக்காக்களின் உமிழ்நீர், சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றில் பி வைரஸ் இருக்கும். இது பொதுவாக குரங்கு கடி அல்லது கீறல்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

    சரியான சிகிச்சை இல்லாமல் போனால், இந்த வைரஸ் தொற்றின் இறப்பு விகிதம் சுமார் 80% என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது மனிதர்களுக்கு பாதிக்கப்படும் போது இது மிகவும் ஆபத்தான நோயாக மாறும்.

    1932இல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சுமார் 50 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. இதில், 21 பேர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

    இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டதும், ஹாங்காங் மருத்துவ அதிகாரிகள் மக்காக்களுடன் தொடர்பைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    குறிப்பாக அவற்றைத் தொடுவது அல்லது உணவளிப்பது போன்றவற்றை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரஸ்
    தொற்று
    தொற்று நோய்
    ஹாங்காங்

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    வைரஸ்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை உடல் நலம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்

    தொற்று

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? உடல் நலம்
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு வைரஸ்

    தொற்று நோய்

    இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; 20 பேர் உயிரிழந்தனர் கொரோனா

    ஹாங்காங்

    பாரிஸைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் மூட்டைப்பூச்சி தொல்லை: பூச்சி கொல்லி விற்பனை 172 மடங்கு அதிகரிப்பு  உலகம்
    சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங் குடியரசு தலைவர்
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்
    உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்தது இந்தியா  பங்கு சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025