Page Loader
தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் - பகுதி 3! 
தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் - பகுதி 3!

தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் - பகுதி 3! 

எழுதியவர் Arul Jothe
Jun 04, 2023
07:00 am

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியாவில் பிரபலமான இடங்களின் சிறப்பையும் அங்கு எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதையும் பார்த்து வருகிறோம். அடுத்து அவசியம் பார்க்க வேண்டிய இடங்களை காணலாம். ஊட்டி: தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மலை நகரங்களில் ஒன்று ஊட்டி. "மலைகளின் ராணி" என்று அழைக்கப்படுகிறது. ஊட்டிக்கு ஏப்ரல், ஜூன், செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் வருகை தருவது சிறந்தது. ஊட்டிக்கு எப்படி செல்வது: ஊட்டிக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையம் மற்றும் அருகிலுள்ள ரயில் நிலையம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் ஆகும், இவை இரண்டும் முறையே நகரத்திலிருந்து 100 மற்றும் 47 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.

Travel

பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் - பகுதி 3

குமரகோம்: பனை மரங்கள், பசுமையான புல்வெளிகளைக் கொண்ட குமரகோம் பசுமைக்கு பெயர் பெற்றது. நவம்பர் முதல் பிப்ரவரி வரை குமரகோம் செல்வதற்கு ஏற்ற பருவம். குமரகோமத்திற்கு எப்படி செல்வது- குமரகத்திற்கு மிக அருகில் கொச்சி விமான நிலையமும் கோட்டயம் ரயில் நிலையமும் உள்ளது. இவை இரண்டும் 45 மற்றும் 16 கிமீ தொலைவில் உள்ளன. மூணாறு: தென்னிந்தியாவின் அழகிய மலைவாசஸ்தலம் மூணாறு ஆகும், இது இடுக்கி மாவட்டத்தில் உள்ள கண்ணன் தேவன் மலைகளில் அமைந்துள்ளது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மூணாருக்குச் செல்ல ஏற்ற பருவமாகும். மூணாறுக்கு எப்படி பயணிப்பது: கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் கொச்சி ரயில் நிலையம் ஆகியவை மூணாறிலிருந்து 125 மற்றும் 124 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.